
ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்(வயது 83) தனது 2வது மனைவியை பிரிந்து விட்டார். ஹாலிவுட் நடிகர் கிளின்ட், தனது இரண்டாவது மனைவியான டினாவை விட்டு பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். 48 வயதாகும் டினா, முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர். கடந்த 17 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த தம்பதியினர், தற்போது பிரிந்துள்ளனர். இதுகுறித்து டினா, நானும், கிளின்ட்டும் கணவன் மனைவியாக இப்போது இல்லை. ஆனால் எங்களது நட்பு தொடர்கிறது, நெருக்கமும் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். இவர்களுக்கு 16 வயதில் மோர்கன் என்ற பெண் உள்ளார். கிளின்ட் ஈஸ்ட்வுட் 5 பெண்களுடன் குடும்பம் நடத்தியவர் ஆவார். அதில் மொடல் அழகி மாகி ஜோன்சன் மற்றும் டினா ஆகியோரை மட்டுமே திருமணம் செய்தார். இவர்கள் தவிர மேலும் 3 பெண்களுடன் குடும்பம் நடத்தி மொத்தமாக 7 பிள்ளைகளுக்குத் தந்தையானார். திருமணத்தில் அதிக ஆர்வம் இல்லாத கிளின்ட், திருமணங்கள் சொர்க்கத்தி்ல நிச்சயிக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் திருமணம் என்பது இடியும், மின்னலும் தான் என்றார். திருமணத்தின் மீதுதான் கிளின்ட்டுக்கு வெறுப்பு இருந்ததே தவிர பெண்கள் மீது அலாதிப் பிரியம் கொண்டவர், பலரால் பெண் பித்தர் என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
Posted by NIsha
on 12:49 AM. Filed under
விந்தை உலகம்
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 12:49 AM. Filed under
விந்தை உலகம்
.
Follow any responses to the RSS 2.0. Leave a response