Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
தலப்பாகட்டி பிரியாணி பெயர் பிரச்சினை முடிந்தது.
தலப்பாகட்டி பிரியாணி பெயர் பிரச்சினை முடிந்தது.
திண்டுக்கல் ஆனந்தவிலாஸ் பிரியாணி ஹோட்டல் தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பெயர் பெற்றது, ஆனால் சென்னையில் திரும்பும் இடமெல்லாம் தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் சின்ன மெஸ்சில் ஆரம்பித்து பெரிய ஹோட்டல்கள் வரை இந்த தலப்பாகட்டி என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள்.
2006ல் ராவுத்தர் பிரியாணி ஹோட்டல் தலப்பாகட்டி என்பதில் ஒரு எழுத்தை மாற்றி பயன்படுத்த ஆரம்பித்ததை எதிர்த்து திண்டுக்கல் ஆனந்தவிலாஸ்பிரியாணி கடையினர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என எல்லா இடங்களிலும் திண்டுக்கல் ஆனந்தவிலாஸ் பிரியாணி கடைக்கு வெற்றி கிடைத்தது.
ஆனாலும் ராவுத்தர் ஹோட்டல் தொடர்ந்து தலப்பாகட்டி என்ற பெயரை பயண்படுத்தியதால் ஆனந்தவிலாஸ் ஹோட்டல் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது, தற்போது இரண்டு நிறுவனங்களும் கோர்ட்டுக்கு வெளியே ஏற்பட்ட சமரச உடன்பாட்டில் 60 நாட்களுக்குள் தமிழகம் முழுதும் உள்ள கடைகள் மற்றும் விளம்பரங்களிலிருந்து தலப்பாகட்டி என்ற பெயரை நீக்கிவிடுவதாக ராவுத்தர் ஹோட்டல் உறுதியளித்துள்ளது.
#காக்கா பிரியாணி போடுபவர்கள் கூட தலப்பாகட்டி பிரியாணி என்று சென்னையில் எழுதி வைத்துள்ளார்கள், இதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்



