Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
“1 கோடி சம்பளம் குடுங்க…” : அதிர்ச்சி கொடுத்த காஜலுக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்கள்?
20121 கோடி குடுங்க.., 1½ கோடி குடுங்க.., என்று கோடிகளில் சம்பளம் கேட்டதால் காஜல் அகர்வாலுக்கு புதிய பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன.
தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த ‘மகதீரா’ படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். போனார். அதன் பிறகு தமிழில் ரிலீஸான துப்பாக்கி படமும் அவரது ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது.
இதனால் பீல்டுக்கு வந்த புதிதில் சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காஜல் அகர்வால் அதன்பிறகு தனது சம்பளத்தை ஒரேடியாக 1½ கோடியாக உயர்த்தினார். சமீபத்தில் அவரை புதிய படம் ஒன்றில் கமிட் செய்ய வந்த தயாரிப்பாளர்களிடம் தனக்கு 1½ கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம்.
ப்ளீஸ் கொஞ்சம் அமோண்ட்டை குறைச்சுக்கங்க.. என்று தயாரிப்பாளர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை காஜல். இதனால் அவருக்கு பதில் வேறு நடிகைகளை தயாரிப்பாளர்கள் தேடிப்போக ஆரம்பித்து விட்டனர்.
காஜலின் இந்த அடாவடி சம்பளத்தால் சமீபத்தில் அவரைத் தேடி வந்த தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ஒரு படம், பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படம் என 2 படங்களை அவரை விட்டுப் போய் விட்டன



