Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

மன்மதன்-2 மிரட்ட வரும் சிம்பு


முந்தைய வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவது தற்போது பேஷனாகி விட்டது. விஸ்வரூபம் படத்தையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை கமல் இயக்கி வருகிறார். அதைத் தொடர்ந்து தயாரான சிங்கம்-2 வேகமாக வளர்ந்து வெளியாகி விட்டது. இந்நிலையில், ஜெய்ஹிந்த்-2வை தற்போது இயக்கி வருகிறார் அர்ஜூன்.

அதனால் சிம்புவும் தான் நடித்து வெற்றி பெற்ற மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளாராம். அப்படத்தில் இரண்டு வேடத்தில் நடித்த சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்துதுலானி நடித்திருந்தனர். அதேபோல் இந்த இரண்டாம் பாகத்திலும் இரண்டு முக்கிய நாயகிகள் நடிக்கிறார்களாம்.

தற்போது ஹன்சிகாவுடன் இணைந்து நடித்து வரும் வாலு, வேட்டை மன்னன் படங்களையடுத்து மன்மதன்-2 பட வேலைகளில் தீவிரமாக இறங்குகிறாராம் சிம்பு. இந்த படத்திலும் நாயகியாக ஹன்சிகா நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.

About the Author

Posted by NIsha on 6:28 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:28 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "மன்மதன்-2 மிரட்ட வரும் சிம்பு"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive