முன்னாள் போராளிகள் 100 பேர் நாளை விடுதலை
Posted by NIsha | Sunday, September 8, 2013 | Posted in Srilanka Tamil News
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 100பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகர் விஜேதிலக இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு வருடகாலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், நாளை சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட காலத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும் அவர்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டபின் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் அனைவரும் 100 வீதம் புனர்வாழ்வு பெற்றுவிட்டனர் எனக் குறிப்பிட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இதுவரையில், 11,631 புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது புனர்வாழ்வு பயிற்சியில் ஈடுபட்டு வரும் 247 பேர் அடுத்த வருடம் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகர் விஜேதிலக இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு வருடகாலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், நாளை சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட காலத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும் அவர்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டபின் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் அனைவரும் 100 வீதம் புனர்வாழ்வு பெற்றுவிட்டனர் எனக் குறிப்பிட்டார்.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இதுவரையில், 11,631 புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது புனர்வாழ்வு பயிற்சியில் ஈடுபட்டு வரும் 247 பேர் அடுத்த வருடம் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகரிப்பு
Posted by NIsha | | Posted in Srilanka Tamil News
இலங்கையில் இளவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதார சூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.
இளவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளிலும் யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே இளவயதில் திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக யுனிசெப் தெரிவிக்கின்றது.
தமது பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகலுக்கும் சிறுவயது திருமணங்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறித்த பிரதேச செயலக அதிகாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
குடும்பத்தின் ஏழ்மையான சூழல், தந்தையின் மதுப்பாவனை மற்றும் தாயானவர் மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போவது போன்ற காரணிகள் இப்படியான இளவயது திருமணங்களை அதிகப்படுத்துவதாக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரான துரைசிங்கம் ஜெயசாந்தினி குறிப்பிடுகிறார்.
இளவயது திருமணத்திற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது குறித்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களும் சமூக சூழ்நிலையும் அந்த கணவனை தண்டிப்பதற்கு இடமளிப்பதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகரான அருள்வாணி சுதர்சன் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் திருமண சட்டம் 18 வயதுக்கு கீழ் திருமணப்பதிவு செய்வது சட்ட விரோதம் என்கிறது. ஆனால் அதேசமயம், 16 வயதுக்கு மேற்பட்ட பெண் விரும்பும் ஆணுடன் உறவு வைப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும் சட்டம் சொல்கிறது.
இந்நிலையில் 18 வயதுக்கு குறைந்த பெண் திருமணம் செய்யத்தான் தடை இருக்கின்றதே தவிர விரும்பும் ஆணுடன் இணைந்து வாழ தடை இல்லை என்றாகிறது. இதுவும் அந்த நடைமுறைச்சிக்கல்களில் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா கொள்ளை?
Posted by NIsha | | Posted in Srilanka Tamil News
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா வாடிக்கையாளர் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட வேண்டிய தொகைகளின் சதக் கணக்குகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
பதுளை பிரதேச அரச வங்கியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் பொறுப்பு, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க வங்கியொன்றின் சிரேஸ்ட அதிகாரியொருவர் மிகவும் நுட்பமான முறையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
உள்ளக கணக்காய்வின் போது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கான வட்டி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளின் போது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகளில் ஏதேனும் சதக் கணக்குகள் இருந்தால் அவற்றை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்டர்நெட்டில் ‘ஆபாச படம்’: நடிகை ஹன்சிகா அதிர்ச்சி
Posted by NIsha | | Posted in tamil cinema news
நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.
மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம் உள்ளது. இப்படங்களை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்று தெரியவில்லை.
நயன்தாராவுடன் சிம்பு தொடர்பில் இருந்தபோதும் இதுபோல் படங்கள் வந்தன. ஆபாச படம் பற்றி ஹன்சிகா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ந்தார். அப்போது படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.
இருவர் படங்களையும் மார்ப்பிங் செய்து ஒட்ட வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஹன்சிகா சமீபத்தில் தான் பிறந்தநாளை கொண்டினார். ஆதவரற்ற பெண் குழந்தையொன்றை தத்தெடுக்கவும் செய்தார். இந்த நிலையில் ஆபாச படம் வந்துள்ளதால் சங்கடத்தில் இருக்கிறார்.
சுவேதா பாடல் யூ டியூபில் லீக்
Posted by NIsha | | Posted in tamil cinema news
சுவேதா நடித்த பிரசவ காட்சி படத்துக்கு எதிர்ப்புள்ள நிலையில் இப்படத்தின் குத்து பாடல் யூ டியூபில் வெளியாகி உள்ளது.அரவான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் சுவேதா மேனன், மலையாளத்தில் களிமண் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்துக்காக அவருடைய நிஜ பிரசவ காட்சியை படமாக்கினார் பிளஸ்சி. இதற்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
படத்துக்கு தடை கேட்டு கேரள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போதும் தடை கிடைக்கவில்லை.
இப்படத்துக்காக சுனி ஷெட்டி, சுவேதா மேனன் ஆடிய குத்து பாடல் படமானது. தற்போது அந்த பாடல் யூ டியூபில் வெளியாகி இருக்கிறது.
பிரகாஷ்ராஜ் மனைவியும் பாலிவுட் நடன இயக்குனருமான போனி வர்மா நடனம் அமைத்திருக்கிறார்.
மாதுரி தீட்சித் பற்றி கேள்வி நிருபர் மீது ஐஸ்வர்யா பாய்ச்சல்
Posted by NIsha | | Posted in tamil cinema news
மூத்த நடிகை குத்தாட்டம் ஆடியது பற்றி எங்கிட்ட கேக்காதீங்க என்று நிருபர்கள் மீது சீறினார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு குழந்தை ஆராத்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். மீண்டும் சினிமாவுக்கு வருவது எப்போது என்று கேட்கும்போதெல்லாம் நழுவலான பதில் அளித்து வருகிறார். நான் சினிமாவில்தான் நீடிக்கிறேன்.ரீ என்ட்ரி எப்போது என்று கேட்பதே தவறு என சில மாதங்களுக்கு முன் பதில் அளித்தார். இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ராம் லீலா என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடப்போவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் மும்பையில் நிகழ்ச்சியொன்றுக்கு வந்த ஐஸ்வர்யாராயிடம், மூத்த நடிகைகள் குத்தாட்டம் ஆடுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஒரு நிருபர் கேட்டார்.
(சமீபத்தில் யே ஜவானி ஹே தீவானி படத்துக்காக மாதுரி தீட்சித் ஒரு பாடலுக்கு ஆடியதை மனதில் வைத்து இந்த கேள்வியை நிருபர் கேட்டாராம்). நிருபரின் கேள்வியால் கோபம் அடைந்த ஐஸ்வர்யாராய், ‘இந்த கேள்வியை எங்கிட்ட கேட்காதீங்க, எந்த மூத்த நடிகை குத்தாட்டம் ஆடினாரோ அவரிடம் போய் கேளுங்கள் என்று சூடாக பதில் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






