Published On:Sunday, September 1, 2013
Posted by NIsha
அநுராதபுரத்தில் முகமூடி அணிந்த நபர்களால் பெருந்தொகை பணம் கொள்ளை
அநுராதபுரம் பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள குறுக்கு வீதியில் 11 லட்சத்து 80 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அனுதாரபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விலங்கு உணவு விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றின் ஊழியர் வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்ற பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் பணம் எடுத்துச் செல்லப்பட்ட பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான ஊழியர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


