Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
இந்த வருடம் 80 ஆயிரம் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லுனுவில தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வழமையாக வருடாந்தம் 16 ஆயிரம் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த குணதிலக்க குறிப்பிட்டார்.
உற்பத்தி அதிகரித்துள்ளதன் மூலம், நுகர்வோர் கலப்படமற்ற சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியுமென நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த வருடமும் சிறந்த தேங்காய் விளைச்சலை எதிர்பார்த்துள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தெங்கு செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதால், தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், கொப்பறாக்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக கலாநிதி ஜயந்த குணதிலக்க கூறியுள்ளார்.



