Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
மதகஜராஜாவை திருப்பி கொடுத்த விஷால்
1மதகஜராஜா படத்தை தயாரிப்பாளரான ஜெமினி நிறுவனத்திடமே திருப்பி கொடுத்து விட்டாராம் விஷால்.
சுந்தர்.சியின் இயக்கத்தில் விஷால்- அஞ்சலி- வரலட்சுமி இணைந்து நடித்த படம் மதகஜராஜா.
இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்தது.
படம் முடிவடைந்து 8 மாதங்களாக வெளிவராததால், படத்தை வெளியிட விஷால் முன்வந்தார்.
இதற்காக ஒரு பெரும் தொகை கொடுத்து அந்த படத்தை வாங்கி, தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதற்கு முன்பு ஜெமினி நிறுவனம் தயாரித்த 3 படங்களில் வினியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்த நஷ்டத்தை சரி செய்த பிறகே படத்தை வெளியிட அனுமதிப்போம் என வினியோகஸ்தர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
இதனால் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.
மேலும் கடந்த 3 நாட்களாக தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தும், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே அவுஸ்திரேலியாவை சேர்ந்த சந்தானம் மதகஜராஜா படத்துக்காக தன்னிடம் வாங்கிய ரூ.60 லட்சம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை, படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், படத்தை வருகிற 10ம் திகதி வரை வெளியிட தடை விதித்தார்.
தொடர் பிரச்னைகளால் குழம்பி போன விஷால், படத்தை ஜெமினி நிறுவனத்திடமே திருப்பி கொடுத்து விட்டார்.
இதனை தொடர்ந்து வருகிற 13ம் திகதி படத்தை வெளியிட ஜெமினி நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.