Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
மம்மி வேடத்தில் ஜமாய்க்கும் மீனா
அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குட்டி பெண்ணாக நடித்த மீனா, தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முக்கிய முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் வலம் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்ட மீனா, ‘தம்பி கோட்டை’ படம் மூலம், ‘ரீ – என்ட்ரி’ கொடுத்தார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில், நடுவராக பங்கேற்று வந்த மீனாவை, இப்போது மலையாள சினிமா அரவணைத்துள்ளது.மோகன்லால் ஜோடியாக, இப்போது அவர் நடிக்கும், ‘திரிஷயம்’ படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறார். `பால்யகால சசி’ என்ற படத்தில், மம்மூட்டிக்கே அம்மாவாக நடிக்கிறார் மீனா. இதையடுத்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், அம்மா வேடத்துக்காக, மீனாவை அணுகியுள்ளனர்.



