Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
காணாமல் போனவர்கள் எவருமில்லை அனைவரும் இறந்திருக்கலாம்

இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் என்று எவருமில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பென்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (07) மதியம் 1.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தோ ஒப்படைக்கப்பட்டோ காணாமல் போனவர்கள் என்று எவருமில்லை. இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த ஒப்படைக்கப்பட்ட 12,000 புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வுக்கு அனுப்பபட்டனர்.
இறுதி யுத்தத்தில் 23,000 புலிகள் கொல்லப்பட்டனர். அவற்றுக்குள் இந்த காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் உள்ளடங்கி இருக்கலாம்.
இறுதி யுத்த காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் 50 - 60 புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இறுதி மரியாதை செய்து புலிகளால் எரிக்கப்பட்டதை நாம் ஆள் இல்லாத விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பார்த்தோம்.
அச் சந்தர்பத்தில் உயிரிழந்த புலிகளின் குடும்பத்திற்கு புலிகளால் அறிவிக்கப்படாடாமல் இருந்திருக்கலாம் அவர்களையே தற்போது காணவில்லை என பெற்றோர்கள் தேடலாம்.
இராணுவத்திடம் பெற்றோர்களால் தமது பிள்ளைகள் கையளிக்கப்பட்டு இருந்தால் இராணுவத்தினரால் பதிவேடுக்கப்பட்டு இருக்கும்.
அந்த பெற்றோருக்கு அவர்கள் பிள்ளையை கையேற்றதற்கு ஆதாரமாக இராணுவத்தினரால் ஆவணங்கள் வழங்கப்பட்டு இருக்கும். அதனை ஆதாரமாக கொண்டு அந்த பெற்றோர்கள் போராட்டம் நடத்தலாம் என தெரிவித்தார்.
அதேவேளை நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தால் அல்லது அரச ஆதரவு கட்சியினால் தாக்கப்படுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது கட்சியின் முதன்மை வேட்பாளர் கிருஸ்ணகுமார் மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னால் இராணுவ பொறுப்பதிகாரி ஒருவர் இருப்பதாக நாம் சந்தேகிக்கின்றோம்.
குறித்த பொறுப்பதிகாரி யாழில் நடக்கும் ஊழல் குற்ற செயல்களுக்கு துணை போகின்றார்.
இவர் புலிகளிடம் இருந்து மாதாந்தம் 30,000 ரூபாய் லஞ்சமாக பெற்றதாக போலிசார் எனக்கு கூறி இருந்தார்கள்.
தேர்தல் நோட்டிஸ் ஓட்டுவது மற்றையவர்களின் நோட்டிஸை கிழிப்பது போன்ற செயற்பாடுகளை செய்வது ஒரு சில இராணுவத்தினரே நான் எல்லா இராணுவத்தினரையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன்.
95வீதமான இராணுவத்தினர் நேர்மையானவர்களே 5வீதமானவர்களே அவரின் பின்னால் திரிகின்றனர்.
குறித்த இராணுவ அதிகாரியான யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க 5 வீதமான இராணுவத்தினரை வைத்தே யாழில் சட்டவிரோத நடவடிக்கைகளை செய்கின்றார்.
இந்த வடக்கு தேர்தல் மட்டுமல்ல வடமேல்மாகாண, வடமத்திய மாகாண, தேர்தல்கள் கூட நேர்மையாக ஜனநாயகமாக நடக்கும் என்பது சந்தேகமே.
இந்த தேர்தலை அரசாங்கம் வெளிநாட்டுக்காகவே நடத்த நினைக்கின்றதே தவிர ஜனநாயக ரீதியாக நடத்த நினைக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.
உங்கள் கருத்து