Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் வருவது முற்றாக நின்று போயிருக்கும்!- புதிய பிரதமர்



அவுஸ்திரேலேயப் பொதுத் தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி தோற்று எதிரணியில் இருந்த லிபரல் கன்சர்வேடிவ் கட்சித் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

நாட்டில் நம்பகத்தன்மை வாய்ந்த திறமையான ஒரு புதிய அரசாங்கத்தை தான் அமைக்கவுள்ளதாக வெற்றிக்கு பிறகு அந்தக் கூட்டணியின் தலைவர் டோனி அபாட் தமது ஆதரவாளர்களிடையே பேசும்போது கூறினார்.

இன்னும் ஒராண்டுக்குள் நாட்டின் வரவு செலவுத் திட்டத்தித்தில் உபரித் தொகை இருக்கும் பாதையை நோக்கி தமது அரசு செயற்படும் என தெரிவித்தார்.

அத்துடன, இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலிருந்து கடல் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் வருவது முற்றாக நின்று போயிருக்கும் எனவும் அந்த உரையின் போது தெரிவித்தார்.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சியின் வாக்கு வங்கி குறைந்து போயுள்ளது என்றும் அபாட் கூறியுள்ளார்.

இதனிடையே தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள தொழில்கட்சியின் தலைவர் கெவின் ரட், கட்சியின் தலைமைப் பதவிலியிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

புதிய பிரதமாராக தேர்தெடுக்கப்பட்டுள்ள அபாட்டுக்கு தனது வாழ்த்தையும் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

About the Author

Posted by NIsha on 5:30 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 5:30 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் வருவது முற்றாக நின்று போயிருக்கும்!- புதிய பிரதமர்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive