Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

பண்டத்தரிப்பு சாந்தையில் மாலைநேர வகுப்பிற்கு அமைச்சர் பணிப்புரை

பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த மாலைநேர வகுப்புக்களை மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்தோருக்கு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.பண்டத்தரிப்பு சாந்தைப் பகுதியில் இன்றைய தினம் (5) இடம்பெற்ற ஈ.பி.டி.பியின் வேட்பாளர் அறிமுகம் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக சமூக முன்னேற்றத்திற்கு கல்வியின் அவசியம் தொடர்பில் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.அந்தவகையில், இங்கு நடைபெற்று வந்த மாலைநேர வகுப்புக்கள் கடந்த சில காலங்களாக நடைபெறாத நிலையில் அவற்றை மீளவும் நாளை முதல் இயக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துறைசார்ந்தோர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.அத்துடன், மைதானமொன்றை பெற்றுத் தருமாறும் சந்தைக்கான காணியை பெற்றுத் தருமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.அதுமட்டுமன்றி இப்பகுதியின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய ஏனைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் துறைசார்ந்தோர் ஊடாக கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வுகளையும் பெற்றுத் தருவதற்கு தயாராகவுள்ளோம் என்றும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்










About the Author

Posted by NIsha on 6:50 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:50 PM. Filed under , . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for " பண்டத்தரிப்பு சாந்தையில் மாலைநேர வகுப்பிற்கு அமைச்சர் பணிப்புரை"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive