Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
அழகைத் தக்க வைக்க டிப்ஸ் அழகுக்குறிப்பு
இன்றைய பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று கண்டதையும் முகத்தில் போட்டு கொள்கிறார்கள். ஆனால் என்னதான் முகத்தில் மேக்கப் போட்டு கொண்டாலும் நான் தினமும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவிட்டால் உண்மையான அழகு தெரியாது.
எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் அழகாகலாம் என்பதை பார்க்கலாம். எந்த விதமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகை பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.
* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸ்ஸூம் அதிகரிக்கும்.



