Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
சமையல் குறிப்பு – காலிஃபிளவர் பெப்பர் பிரை
தேவையான பொருட்கள்காலிஃபிளவர் – 1
நெய்- 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிது
உப்பு- தேவையானஅளவு
மிளகு- 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
செய்முறை
காலிஃபிளவரை சிறுதுண்டுகளாக நறுக்கி கொதிநீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும். மிளகு, சீரகத்தைத் தூளாக்கிக் கொள்ளவும். பின்பு காலிஃபிளவரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, போட்டு தாளித்து பிறகு வேகவைத்த காலிஃபிளவரைப்போட்டு மிளகு சீரகம் தூள் தூவி இறக்கவும்.



