Headlines

முன்னாள் போராளிகள் 100 பேர் நாளை விடுதலை

Posted by NIsha | Sunday, September 8, 2013 | Posted in

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 100பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகர் விஜேதிலக இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஒரு வருடகாலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், நாளை சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட காலத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும் அவர்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டபின் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் 100 வீதம் புனர்வாழ்வு பெற்றுவிட்டனர் எனக் குறிப்பிட்டார்.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இதுவரையில், 11,631 புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது புனர்வாழ்வு பயிற்சியில் ஈடுபட்டு வரும் 247 பேர் அடுத்த வருடம் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகரிப்பு

Posted by NIsha | | Posted in



இலங்கையில் இளவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதார சூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.

இளவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக நிர்வாக பிரிவுகளிலும் யுனிசெப் அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளில் இளவயது திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகமாக காணப்படும் பிரதேசங்களிலே இளவயதில் திருமணங்களும் அதிகம் காணப்படுவதாக யுனிசெப் தெரிவிக்கின்றது.

தமது பிரதேசத்தில் பாடசாலை இடைவிலகலுக்கும் சிறுவயது திருமணங்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறித்த பிரதேச செயலக அதிகாரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

குடும்பத்தின் ஏழ்மையான சூழல், தந்தையின் மதுப்பாவனை மற்றும் தாயானவர் மத்திய கிழக்குக்கு வேலைக்குப் போவது போன்ற காரணிகள் இப்படியான இளவயது திருமணங்களை அதிகப்படுத்துவதாக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரான துரைசிங்கம் ஜெயசாந்தினி குறிப்பிடுகிறார்.

இளவயது திருமணத்திற்கு சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது குறித்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்முறை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆனால் நடைமுறைச் சிக்கல்களும் சமூக சூழ்நிலையும் அந்த கணவனை தண்டிப்பதற்கு இடமளிப்பதாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உள்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பான தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகரான அருள்வாணி சுதர்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் திருமண சட்டம் 18 வயதுக்கு கீழ் திருமணப்பதிவு செய்வது சட்ட விரோதம் என்கிறது. ஆனால் அதேசமயம், 16 வயதுக்கு மேற்பட்ட பெண் விரும்பும் ஆணுடன் உறவு வைப்பது பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும் சட்டம் சொல்கிறது.

இந்நிலையில் 18 வயதுக்கு குறைந்த பெண் திருமணம் செய்யத்தான் தடை இருக்கின்றதே தவிர விரும்பும் ஆணுடன் இணைந்து வாழ தடை இல்லை என்றாகிறது. இதுவும் அந்த நடைமுறைச்சிக்கல்களில் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.

அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா கொள்ளை?

Posted by NIsha | | Posted in



அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா வாடிக்கையாளர் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட வேண்டிய தொகைகளின் சதக் கணக்குகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

பதுளை பிரதேச அரச வங்கியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் பொறுப்பு, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க வங்கியொன்றின் சிரேஸ்ட அதிகாரியொருவர் மிகவும் நுட்பமான முறையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

உள்ளக கணக்காய்வின் போது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கான வட்டி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளின் போது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகளில் ஏதேனும் சதக் கணக்குகள் இருந்தால் அவற்றை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இன்டர்நெட்டில் ‘ஆபாச படம்’: நடிகை ஹன்சிகா அதிர்ச்சி

Posted by NIsha | | Posted in


நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.

மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம் உள்ளது. இப்படங்களை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்று தெரியவில்லை.

நயன்தாராவுடன் சிம்பு தொடர்பில் இருந்தபோதும் இதுபோல் படங்கள் வந்தன. ஆபாச படம் பற்றி ஹன்சிகா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ந்தார். அப்போது படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.

இருவர் படங்களையும் மார்ப்பிங் செய்து ஒட்ட வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஹன்சிகா சமீபத்தில் தான் பிறந்தநாளை கொண்டினார். ஆதவரற்ற பெண் குழந்தையொன்றை தத்தெடுக்கவும் செய்தார். இந்த நிலையில் ஆபாச படம் வந்துள்ளதால் சங்கடத்தில் இருக்கிறார்.

சுவேதா பாடல் யூ டியூபில் லீக்

Posted by NIsha | | Posted in

சுவேதா நடித்த பிரசவ காட்சி படத்துக்கு எதிர்ப்புள்ள நிலையில் இப்படத்தின் குத்து பாடல் யூ டியூபில் வெளியாகி உள்ளது.

 அரவான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் சுவேதா மேனன், மலையாளத்தில் களிமண் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்காக அவருடைய நிஜ பிரசவ காட்சியை படமாக்கினார் பிளஸ்சி. இதற்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 படத்துக்கு தடை கேட்டு கேரள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போதும் தடை கிடைக்கவில்லை.
இப்படத்துக்காக சுனி ஷெட்டி, சுவேதா மேனன் ஆடிய குத்து பாடல் படமானது. தற்போது அந்த பாடல் யூ டியூபில் வெளியாகி இருக்கிறது.

 பிரகாஷ்ராஜ் மனைவியும் பாலிவுட் நடன இயக்குனருமான போனி வர்மா நடனம் அமைத்திருக்கிறார்.

மாதுரி தீட்சித் பற்றி கேள்வி நிருபர் மீது ஐஸ்வர்யா பாய்ச்சல்

Posted by NIsha | | Posted in

மூத்த நடிகை குத்தாட்டம் ஆடியது பற்றி எங்கிட்ட கேக்காதீங்க என்று நிருபர்கள் மீது சீறினார் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு குழந்தை ஆராத்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். மீண்டும் சினிமாவுக்கு வருவது எப்போது என்று கேட்கும்போதெல்லாம் நழுவலான பதில் அளித்து வருகிறார். நான் சினிமாவில்தான் நீடிக்கிறேன்.

ரீ என்ட்ரி எப்போது என்று கேட்பதே தவறு என சில மாதங்களுக்கு முன் பதில் அளித்தார். இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ராம் லீலா என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடப்போவதாக தகவல் வெளியானது. சமீபத்தில் மும்பையில் நிகழ்ச்சியொன்றுக்கு வந்த ஐஸ்வர்யாராயிடம், மூத்த நடிகைகள் குத்தாட்டம் ஆடுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஒரு நிருபர் கேட்டார்.

(சமீபத்தில் யே ஜவானி ஹே தீவானி படத்துக்காக மாதுரி தீட்சித் ஒரு பாடலுக்கு ஆடியதை மனதில் வைத்து இந்த கேள்வியை நிருபர் கேட்டாராம்). நிருபரின் கேள்வியால் கோபம் அடைந்த ஐஸ்வர்யாராய், ‘இந்த கேள்வியை எங்கிட்ட கேட்காதீங்க, எந்த மூத்த நடிகை குத்தாட்டம் ஆடினாரோ அவரிடம் போய் கேளுங்கள் என்று சூடாக பதில் அளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இனியா படத்துக்கு விருது...........

Posted by NIsha | | Posted in

சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா நடித்துள்ள படம் வாகை சூட வா. இப்படத்துக்கு மத்திய அரசின் செய்தி மற்றும் விளையாட்டு துறை, திரைப்பட இயக்குனரகம், நவதர்சன் திரைப்பட கழகம்,

அலையன்ஸ் பிரன்சிஸ் ஆகியவை இணைந்து புதுச்சேரியில் நடத்தும் விழாவில் 2012ம் ஆண்டுக்கான சிறந்த பட விருது இன்று வழங்குகிறது.

நிர்வாண போஸ் கொடுத்த தமிழ் பட நடிகை

Posted by NIsha | | Posted in

தமிழ் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். யுனிவர்சிட்டி தமிழ் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.

காமசூத்ரா 3 டி ஆங்கில படத்திலும், கேம், ரெட் சுவஸ்திக் போன்ற இந்தி மற்றும் எ பிலிம் பை அரவிந்த், வெண்டி மப்புலு போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆங்கில இதழ் பிளேபாய் அட்டை படத்துக்காக இவர் ஏற்கனவே நிர்வாண போஸ் கொடுத்ததுடன் அந்த படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதேபோல் காமசூத்ராவில் நடித்த கவர்ச்சி படங்களையும் வெளியிட்டிருந்தார்.

நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு நிர்வாண படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.


பப்ளிசிட்டிக்காக ஷெர்லின் அடிக்கடி இதுபோல் நடந்து கொள்கிறார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கொட்டப்போவதில்லை. காரணம் அவரிடம் நடிப்பு, டான்ஸ் திறமை இல்லை என்கிறது பாலிவுட் வட்டாரம்.

பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியை நம்பும் சதா

Posted by NIsha | | Posted in

பட வாய்ப்பில்லாமல் விரக்தியில் இருக்கும் சதா, புதுபட வாய்ப்புகளுக்காக கிளாமர் தூக்கலாக நடிக்க ஓகே சொல்கிறார். ஜெயம் படத்தில் அறிமுகமானார் சதா. தொடர்ந்து வர்ண ஜாலம், அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களில் நடித்த சதா, டாப் இடத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணினார். இந்நிலையில் சமந்தா, தமன்னா, டாப்ஸி, காஜல் அகர்வால் போன்ற இளம் நடிகைகளின் அதிரடி வரவால் அவரது கனவு தகர்ந்தது. கோலிவுட்டில் இல்லாவிட்டாலும் டோலிவுட், பாலிவுட்டில் தனக்கென இடத்தை பிடிக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதுவும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் புலிவால் என்ற படம் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். எதிர்பார்த்த வெற்றி இல்லாததால் மீண்டும் வீட்டுக்குள் முடங்கினார் சதா.

விரக்தியில் இருந்தவருக்கு சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் மத கஜ ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. அதை ஒப்புக்கொண்டார். இதேபடம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி ரிலீஸ் ஆகிறது. இந்த பாடலில் கவர்ச்சி தூக்கலாக நடித்திருக்கும் சதா இப்படத்துக்கு பிறகு தன் மீது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை விழும், பட வாய்ப்புகள் தேடி வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.

பேஸ்புக் ஐஸ்கிரீம்: சுவைக்க நீங்கள் தயாரா?

Posted by NIsha | Saturday, September 7, 2013 | Posted in

பேஸ்புக் போன்ற சமூகதளங்கள் மீதான மக்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதனை நன்கு அறிந்து வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்தி நல்ல இலாபம் ஈட்டுகின்றன.

குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் பெயரில் டீ-சேர்ட்கள், செருப்புகள், கடிகாரங்கள் என பலவற்றை நாம் கடைகளுக்குச்செல்லும் போது காணக்கூடியதாக உள்ளது.

மேலும் அண்மையில் ஸ்பெய்ன் நாட்டில் டுவிட்டர் ஹோட்டலொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது தொடர்பில் நாம் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம்.

இந்நிலையில் குரோஷியாவில் உள்ள மேர்ட்டர் தீவில் உள்ள ஐஸ்கீரிம் வர்த்தக நிலையத்தில் பேஸ்புக் என்ற பெயரில் புதிய ஐஸ்கிரீமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

fb-ice‘வெலண்டீனோ ஐஸ்கிரீம் ஷொப்’ எனப்படும் குறித்த கடை உரிமையாளர்களில் ஒருவர் அவரது 15 வயதான மகள் பேஸ்புக்கினை அடிக்கடி உபயோகிப்பதனைக் கண்டே இவ் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வெனிலா ஐஸ்கிரீமில் நீல நிற சிரைப்பொன்றை ஊற்றியே இதனைத் தயாரித்துள்ளனர். இதன் 1 ஸ்கூப்பின் விலை 1.32 அமெரிக்க டொலர்களாகும்.

இவ் ஐஸ்கிரீமிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாகவும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காதல் காட்சியில் நெருக்கம்

Posted by NIsha | | Posted in


samanthaநீறுபூத்த நெருப்பாக அடங்கிக்கிடக்கும் சித்தார்த் சமந்தா காதல் விவகாரம் எப்போது வேண்டுமானாலும் சூடுபிடிக்கும் நிலை உள்ளது. அதை வெளிக்காட்டாமல் இந்த விவகாரத்திலிருந்து இருவரும் விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


தெலுங்கில் உருவாகும் ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்கும் சமந்தா, காதல் காட்சிகளில் ஜூனியருடன் நெருங்கி நடிக்கிறாராம். அவருக்கு தெரிந்த நடிகர்கள் பலர் இதில் நடிப்பதால் குஷியாக இருக்கிறாராம் சமந்தா.

அஜித்தின் அடுத்த பட டைரக்டர் ரெடி?

Posted by NIsha | | Posted in

ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கன்பார்ம் செய்திகள் வெளியாகி விட்ட நிலையில் அஜித்தின் அடுத்த பட டைரக்டர் யார்? என்ற கேள்விக்கும் தற்போது விடை கிடைத்திருக்கிறது.

அஜித் தற்போது ‘ஆரம்பம்’, ‘வீரம்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘ஆரம்பம்’ படத்தை விஸ்ணுவர்தனும் ‘வீரம்’ படத்தை சிறுத்தை சிவாவும் டைரக்ட் செய்து வருகின்றனர். இரண்டு படங்களில் முன்னது தீபாவளிக்கும், பின்னது பொங்கலுக்கும் ரிலீஸாக உள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் ‘வீரம்’ படத்துக்காக ஆந்திராவில் ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியை படமாக்கி விட்டு வந்திருக்கிறார் டைரக்டர் சிவா.
மேற்படி சண்டைக்காட்சியை அஜித்துக்கு மட்டும் பிரத்யேகமாக போட்டுக் காண்பித்தாராம் சிவா. அந்த காட்சிகளைப் பார்த்து மிரண்டு போன அஜித்  ‘சிறுத்தை’ சிவாவைக் கட்டிப்பிடித்து எல்லாமே டிபரெண்ட்டா இருக்கு என்று சொல்லி வெகுவாகப் பாராட்டினாராம்.

அதுமட்டுமில்லாமல் ‘என்னோட அடுத்த படத்துக்கும் நீங்கதான் டைரக்டர்’ என்று சொல்ல சிறுத்தை சிவா அந்த சந்தோஷத்தில் தூங்கியே நாலு நாளாச்சாம்.

அப்புறம் என்ன வளைச்சி அடிக்க வேண்டியது தானே..?

கொழுக்கட்டை செய்தல் முறை ( விநாயக சதூர்த்தி Special) சமையல் குறிப்பு

Posted by NIsha | | Posted in

 விநாயக சதூர்த்திக்கு தேங்காய்,உளுந்து ஆகிய இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.

மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.

தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:

துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்




செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.

உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு





செய்முறை:

1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.

2020 ஆம் ஆண்டிற்குள் விசர் நாய்க்கடி நோயை ஒழிக்க நடவடிக்கை

Posted by NIsha | | Posted in




எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க்கடி நோயை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன் இந் நாய்களின் கடிக்கு இலக்காகி வருவோரின் தொகையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையிலேயே சுகாதார அமைச்சு அந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்து.

இதன்படி சுகாதார அமைச்சு உள்ளூராட்சி அமைச்சு, கால்நடை வள அமைச்சு, உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டடுள்ளது.
குப்பைகள், கழிவுப் பொருட்கள் பெருமளவில் குவிந்து காணப்படும் இடங்களிலேயே இவ்வாறான நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

விசர் நாய்க்கடி மூலம் கடந்த வருடம் 38 பேரும் இவ்வருடத்தில் இதுவரை 17 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள் வைத்திருந்தவர் கைது

Posted by NIsha | | Posted in




போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள் வைத்திருந்த ஒருவர் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து நான்கு போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்படும் - யாழில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

Posted by NIsha | | Posted in ,


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களது பணிப்புரைக்கு அமைவாகவும் உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய காணிகள்; பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த மாகாணசபை ஆட்சி அதிகாரத்தை உங்களிடம் தருவதற்கு தயாராகவிருக்கின்றார். இந்நிலையில் இந்த ஆட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் போனால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாகாண மக்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் மகிந்த சிந்தனையூடாக தெளிவாக கூறியுள்ளார். 

இதனிடையே உயர்பாதுகாப்புவலயப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக மக்களிடம் நிச்சயம் நாம் கையளிப்போம் என்று தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இதனை செயற்படுத்தக்கூடியவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் விஸ்தரிப்பின் போது பெறப்படும் காணிகளுக்கேற்ற பெறுமதியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமெனவும் வடமாகாணத்திலுள்ள காணிகளை அரசு பறிக்கின்றது என்று சிலர் கூறிவரும் நிலையில் இக்காணிகள் வடமாகாணத்தில் இந்திய அமைதிப்படையிருந்த போது எடுத்த காணிகள் என்பதுடன் நாம் அவற்றை படிப்படியாக மக்களிடம் மீண்டும் கையளித்து வருகின்றோம் என்பதுடன் நாம் தமிழ் மக்களின் காணிகளை ஒருஅங்குலமேனும் எடுத்தது இல்லை.

கடந்தகாலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களிலும் ஏனைய தேர்தல்களிலும் வெற்றிபெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி நீங்கள் நன்கறிவீர்கள். இங்குள்ள பத்திரிகைகள் மக்களுக்கு உண்மையான செய்திகளை வெளியிடுவதில்லை. இந்நிலையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் ஒருபக்க செய்திகளை வெளியிடாமல் எங்களுடைய கருத்துக்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் தமது பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், சர்வதேச சமூகமும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கடந்த நான்கு வருடகாலமாக வடமாகாணத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

நீங்கள் இந்த இடத்தில் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டில் ஏனைய மாகாணங்களில் மாகாணசபை அதிகாரங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  இதேபோன்று வடமாகாண சபைத் தேர்தல்தான் இதுவரையில் நடத்தப்படாதுள்ளதுடன் அதற்குக் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் என்றும் சுட்டிக்காட்டினார். 

வடமாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறும் இதனூடாக உங்களுடைய வாழ்வாதாரமும், இப்பகுதியின் அபிவிருத்தியும் மேலொங்க முடியுமென்றும் தெரிவித்தார்.

இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளர் வடமாகாணத்தைச் சேர்ந்தவரா?.. எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவில்லையென்றும், நான் பலமுறை இங்கு வருகைதந்துள்ள போதிலும் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக ஒரேயொருமுறை இங்கு வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் எமது மக்களின் வாழ்வு அழிக்கப்பட்ட போதிலும், இழக்கப்பட்ட போதிலும் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணியாற்றியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்தில் கல்வி, விவசாயம், இந்திய மீனவர்களால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்படாதுள்ளதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள்,  இந்திய மீனவர்களது அத்துமீறலுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குரல் கொடுத்து வரும் அதேவேளை, எமது கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி அவர்கள் 5,000 தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, அரசபடையிலும் இணைக்கவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

எனவே வடமாகாண மக்கள் நன்றியுடையவர்களாகவும், சமாதான விரும்பிகளுமாக இருக்கின்றபடியால் இன்றுள்ள அமைதிச் சூழலை பாதுகாக்கும் வகையில் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். 

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.ம.சு.முன்னணியின்; முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட வேட்பாளர்களும் உடனிருந்தனர்.

வடமாகாண சபை என்பது எமது மக்களுக்கான சர்வரோக நிவாரணி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Posted by NIsha | | Posted in ,


வடமாகாண சபை என்பது எமது மக்களுக்கான சர்வரோக நிவாரணி என்றும் அதனூடாக எமது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியுமென்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் (7) இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னிணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபை முறையென்பது என்னுடைய 25 வருடகால கனவாகவுள்ளது. இதனூடாக எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட உரிமைகளுக்கு தீர்வு காணமுடியும். இதுவொரு சர்வரோக நிவாரணி என்பது மட்டுமல்லாது இதன்மூலம் எமது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யவும் முடியும். ஆனால், மாகாணசபை முறையை நாம் ஏற்றுக் கொண்ட போது எம்மை துரோகிகள் என்று கூறி எதிர்த்தவர்கள் இன்று அதே மாகாண சபை முறைக்காக போட்டியிடுகின்றார்கள். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விடயத்தில் மனம்திருந்தி விட்டார்கள் என்று கூறினால் நான் அதை ஒருபோதும் நம்பத்தயாராகவில்லை. இந்த நல்லசந்தர்ப்பத்தை வாய்ப்பை எமக்கு கிடைக்கவிடாமல் செய்வதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பிரதான நோக்கமாகவுள்ளது. இந்நிலையில் மக்களை தூண்டியும் உசுப்பேற்றியும், ஏமாற்றியும் வாக்குகளை அபகரிப்பதே அவர்களது நோக்கமாகவுள்ளது. நாம் வடமாகாண சபையை வென்றெடுப்பதன் ஊடாக மூன்று தொடக்கம் ஐந்து வருடங்களுக்குள் வளம் நிறைந்த பகுதியாக மாற்றியமைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.


தமிழ் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளர் ஈ.பி.டி.பியுடன் இணைவு!

Posted by NIsha | | Posted in ,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளருமான K.S. பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். கூட்டமைப்பின் தீவகத்திற்கான இணைப்பாளராக கடந்த காலங்களில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவும் பிரசாரங்களில் முனைப்பாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடுகளிலும்; கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம், கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனது தெரிவு மற்றும் தீவகப் பகுதியில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளை இதுவரையில் மேற்கொள்ளாத கூட்டமைப்பின் மற்றுமொரு வேட்பாளருமான கனகரத்தினம் விந்தன் தொடர்பிலும் இவர் அதிருப்தி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரன் (கமல்) முன்னிலையில் நேற்றையதினம் (06) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து கொண்ட பேணாட் மாஸ்ரர் கருத்துத் தெரிவிக்கும்போது, எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி தொடர்ந்தும் ஏமாறக்கூடாது. தீவகத்தை மட்டுமல்ல வடபகுதியை எவ்விதத்திலும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கான திட்டங்களோ, கொள்கைகளோ அவர்களிடம் இல்லை. இந்நிலையில், வடபகுதியைப்பற்றியோ, மக்களது வாழ்நிலைபற்றியோ ஒன்றுமேதெரியாமலும், வடபகுதியில் வாக்குரிமை இல்லாது கொழும்பில் வாழ்ந்து வந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதில் என்ன நியாயம் இருக்கின்றது என விசனம் தெரிவித்ததுடன், இன்றைய அமைதிச் சூழலிற்கு வித்திட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் என்றும் சுட்டிக்காட்டினார். இதனிடையே ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் வடபகுதியில் பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும்; அமைச்சர் அவர்களினால் மட்டுமே பெற்றெடுக்கமுடியும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வாய் கிழியப் பேசமுடியுமே தவிர வேறெதையும் செய்யமுடியாது என்றும் உறுதிபடத்தெரிவித்தார். இதன்போது, வட மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்; முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா, வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன்(கமல்), சூசைமுத்து அலக்சாண்டர்(சார்ள்ஸ்) ஆகியோர் உடனிருந்தனர்.






ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கும் சந்தானம்!

Posted by NIsha | | Posted in

சந்தானம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கவிருக்கிறாராம். இன்றைய தேதியில் அதிகம் கிராக்கி உள்ள காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சந்தானம் மீது கோலிவுட் ஹீரோக்கள் பலர் கடுப்பில் உள்ளார்களாம். 

நாம் ஒரு படத்தில் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறாரே என்று ஹீரோக்கள் காட்டமாக உள்ளார்களாம். இப்பொழுது அவர்கள் வயிறு ரியும்படி சந்தானம் ஒன்றை செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குகிறாராம். 
தற்போது கோலிவுட்டில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. முன்பு பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆர்டர் கொடுத்தபோது அதை ஓட்ட உங்களுக்கு தகுதி இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் சந்தானம் தமிழக மக்களை சிரிக்க வைக்கிறார் என்ற தகுதியை வைத்து அவருக்கு காரை விற்கிறதாம். 


 தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வாங்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம் 2 வுக்கும் கிளம்பும் சர்ச்சைகள்

Posted by NIsha | | Posted in



கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம். இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி அப்படத்துக்கு முஸ்லீம் அமைப்புகள் தடை கோரின. அதையடுத்து தமிழக அரசு தலையிட்டு படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததோடு, சில காட்சிகளை கத்தரித்து வெளியிட அனுமதி கோரியது.

அதேபோல், இப்போது கமல் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் -2 படத்திலும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், கமல் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லீம்களை காயப்படுத்தி வருகிறார் என்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், டாம் 999, மெட்ராஸ் கபே போன்ற படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன என்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு, விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாமல், சமூக ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் படத்தை எடுத்து, ஏற்கனவே காயம்பட்டுள்ள முஸ்லீம்களின் காயத்துக்கு இந்த முறை கமல் மருந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில், பின்லேடன் கெட்டப்பில் கமல் நடித்திருப்பது போன்ற போட்டோக்கள் இணையதளங்களில் வெளியான பிறகே இதுபோன்ற எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நான்தான்டா படத்தில் ஆபாச நடனம்

Posted by NIsha | | Posted in




ரத்த சரித்திரம் படத்தையடுத்து ராம்கோபால்வர்மா தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ள படம் நான்தான்டா. இந்த படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.அனாமிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திலும் தனது வழக்கமான பாணியில் தாதாயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் புதுமுக நடன மங்கை ஒருவரை ஆபாச நடனம் ஆடவிட்டுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் நடனமாஸ்டர் ராதிகா கூறுகையில், இந்த படத்திற்கு அப்படி ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக்கொண்டதால் வைத்தேன். இதை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், இளைஞர்களுக்கு ரொம்ப இஷ்டமான பாடலாக இருக்கும். அவர்களை மனதில் கொண்டுதான் இப்படியொரு பாடலே வைக்கப்பட்டது என்கிறார்.

நமீதா அண்மைய படங்கள்

Posted by NIsha | | Posted in















ஹிந்தி படத்தில் அறிமுகமாகவுள்ள அக்ஷரா!

Posted by NIsha | | Posted in




கமலின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன், உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசை யமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், எதிர்பாராத விதமாக, லக் என்ற இந்தி படம் மூலம் நடிகையாகிவிட்டார்.அவரைப் போலவே, இப்போது சினிமாவில் இயக்குனராவதற் காக, சில முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்று வந்த கமலின் இளைய மகள் அக் ஷராவும், ஒரு இந்தி படத்தில், ஹீரோயினாக நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அவரின் அக்கா ஸ்ருதியிடம், இதைப்பற்றி கேட்டால்,அப்படியா என, ஆச்சர்யப்படுகிறார். தங்கையின் திரையுலக விஷயத்தில், தான் தலையிடுவது இல்லை என்றும், அவர் கூறுகிறார். ஆனாலும், அக் ஷராவை, பாலிவுட் தயாரிப்பாளர்கள் மட்டு மல்லாமல், தெலுங்கு, தமிழ் தயாரிப்பாளர்களும், தங்கள் படத்தில் நடிக்கும்படி கூறி, துரத்த தொடங்கி விட்டனர்.

முதல் முதல் ஆடிய விஜய் சேதுபதி!

Posted by NIsha | | Posted in

தென் மேற்கு பருவக்காற்று படம் தொடங்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என, பல படங்களில், நாயகனாக நடித்த விஜயசேதுபதி, இப்போது அரை டஜன் படங்கள் வரை கைவசம் வைத்துள்ளார். ஆனாலும், இதுவரை எந்த படத்திலுமே,

அவர் நடனமாடியது இல்லையாம். ஒரு படத்திலாவது நடனமாடும் வாய்ப்பு கிடைக்காதா என,ஏங்கிய அவருக்கு, இப்போது,அந்த ஏக்கம் தீர்ந்துள்ளது.


இதற்கு தானே ஆசைப்பட்டாய் பால குமாரா’ படத்தில், முதன் முறையாக ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். அவர் கூறுகையில், நடிப்பில் போதிய பயிற்சி பெற்ற போதும், நடனத்தில் சரியான பயிற்சி பெறவில்லை. இதுவரை நான் நடித்த படங்களில் டூயட் இடம் பெறாததால்,

நடனமும் தேவைப்படவில்லை. ஆனால், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடனமாட வேண்டு மென்று, டைரக்டர் சொன்னதும், முறையாக பயிற்சி எடுத்து ஆடினேன். அந்த பாடலை மட்டும் எட்டு நாட்கள் படமாக்கினர். நானும் குறை தெரியாத அளவுக்கு ஆடியுள்ளேன் என்கிறார்.

சிரஞ்சீவி மகன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

Posted by NIsha | | Posted in



சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவின் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்

தரவிட்டு உள்ளது. ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என சிரஞ்சீவி கருத்து வெளியிட்டதற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா, தம்பி பவன் கல்யாண் நடித்த படங்களை ஓட விடமாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இது போல் ஆந்திராவிலும் தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. ராயலசீமா பகுதியில் சிரஞ்சீவி குடும்பத்தினர் படங்களை ஓடவிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். ராம்சரண் நடித்த தூபான் படக்குழுவினர் ஐகோர்ட்டில் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். அதிக செலவிட்டு படத்தை எடுத்துள்ளோம். படம் ரிலீசாக விட்டால் நஷ்டம் ஏற்படும் எனவும் தூபான் படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தர விடவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘தூபான்’ படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டனர். இதையடுத்து படம் நேற்று ரிலீசானது தியேட்டர்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். விசாகபட்டினம் போன்ற பகுதிகளில் தியேட்டர்கள் தாக்கப்படலாம் என பயந்து படம் திரையிடப்பட வில்லை.

மலையாள நடிகருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த நஸ்ரியா

Posted by NIsha | | Posted in

நேரம் பட நாயகி, தற்போது ஜெய், தனுஷ், ஆர்யா, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார். அதோடு ஒரேயொரு படத்திலேயே தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் மனதில் இடம்பிடித்துவிட்டார் நஸ்ரியா. அதனால், அடுத்தடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ண படாதிபதிகள் க்யூவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழைப்போலவே தனது தாய்மொழியான மலையாள படங்களிலும் நடித்து வரும் நஸ்ரியா, நான் நடிக்க வேண்டுமானால், நான் கால்சீட் கொடுக்கிற தேதியில் நீங்கள் படப்பிடிப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றொரு புதிய கண்டிசனையும் தற்போது பிறப்பித்திருக்கிறார். ஆனால், அதற்கும் உட்பட்டு படாதிபதிகள் அவரை மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தன்னிடம் ஒரு படத்தில் நடிக்க கதை சொல்ல வந்த இயக்குனரிடம், இந்த கதையில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னாராம் நஸ்ரியா. அதையடுத்து அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குனர், படாதிபதி இருவருமே ஓ.கே சொல்லிவிட்டதால், இப்போது நஸ்ரியாவின் சிபாரிசினால் தமிழுக்கு என்ட்ரி கொடுக்க உள்ளார் துல்கர்சல்மான். இவர் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சலால் மொபைல்ஸ் என்ற படத்தில் துல்கர்சல்மானுடன், நஸ்ரியா ஜோடி சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட அழுத்தமான நட்புதான் இந்த சிபாரிசுக்கு பின்னணியாம்.
Powered by Blogger.

    Blog Archive