Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
கள்ளக் காதல் வெளியே தெரிந்ததால் 44 வயதான நபர் தற்கொலை
கள்ளக் காதல் தொடர்பு வெளியுலகிற்கு தெரிந்தமையின் காரணமாக சிலாபம், தெதுறு ஓயா பிரதேசத்தில் 44 வயதான நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனார்.

தூக்கிட்டமையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறலின் காரணமாக இந்நபர் உயிரிழந்துள்ளதாக நேற்று (06) சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காதல் தொடர்பு வெளிப்பட்டமையின் காரணமாக இந்நபர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


