Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
நாயகனாகிறார் பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்.
அரசியல், திரையுலகம் இவை இரண்டிலும் வாரிசுகள் வரவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தற்போது இதில் நகைச்சுவை நடிகர் மயில் சாமியின் மகனும் இணைந்துவிட்டார்!ஆனால் அவர் களமிறங்க இருப்பதோ திரையில், ஆமாங்க ‘தேரடி வீதி திருக்கண்ணபுரம்’ என்கிற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் மயில் சாமியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை திருவாரூர் பாபு இயக்குகிறார். ஏற்கெனவே இவர், கந்தா படத்தை இயக்கியிருக்கிறார்.
‘கில்லி’, ‘தூள்’ ‘ஒஸ்தி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோபிநாத் இப்படத்தை தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக இருந்த சாம் டி.ராஜ் இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற நடிகை, நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.


