Headlines
Published On:Friday, September 6, 2013
Posted by NIsha

குழந்தையை கருணை கொலை செய்யுங்கள்! தாய் போராட்டம்

உடல் முழுவதும் செயலிழந்த குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தாய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழிக்கோடு நெடுவிளையை சேர்ந்த தம்பதி டென்னிஸ்குமார்- சுஜாமேரி.

இவர்களுக்கு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் அந்த குழந்தையின் உடலில் எந்த அசைவும் இல்லை, பின்னர் கண்பார்வையும் போனது.

இதற்கு குறித்த மருத்துவமனையில் மருத்துவர்கள் தான் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனையடுத்து கன்னியாகுமரி முதல் சென்னை அரசு தலைமை குழந்தை மருத்துவமனை வரை பரிசோதித்து பார்த்தும், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

எனவே குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி, நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் எதிரில் குழந்தையுடன் பெற்றோர் மண்டியிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

About the Author

Posted by NIsha on 3:22 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 3:22 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "குழந்தையை கருணை கொலை செய்யுங்கள்! தாய் போராட்டம்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive