Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துதல் தொடர்பில் ஆராய்வு


பொதுமக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக இராணுவத்தை பயன்படுத்துதல் தொடர்பில் உள்ள சட்ட ரீதியான விடயங்களை ஆராய்வதற்கான நடவடிக்கையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஈடுபட்டுள்ளது.



இவ்விடயம் தொடர்பில் பரிசீலனைகளை மேற்கொள்வதற்காக விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.



இந்த பரிசீலனை அறிக்கை, தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



இவ் அறிக்கை இரு வார காலத்துக்குள் தயாரிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் பொது மக்களது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்தினரை பயன்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

About the Author

Posted by NIsha on 4:06 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 4:06 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துதல் தொடர்பில் ஆராய்வு"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive