Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
சிறுவர்கள் இருவர் துஷ்பிரயோகம்; சந்தேகநபர் தலைமறைவு
சிறுவர்கள் இருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்தார்.
இளவாலைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதயில் உள்ள இளைஞர் ஒருவர் 7 மற்றும் 11 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்களை தனது மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாற்றம் அற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அச்சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசியிலுள்ள பாலியல் தொடர்பான படங்களைக் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து அச்சிறுவர்களுடன் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். வீடு திரும்பிய இரு சிறுவர்களும் தங்களது பெற்றோரிடம் நடந்த விடயங்களைத் தெரிவித்ததை அடுத்து அவர்கள் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்ற போதிலும் அவர் அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார் எனவும் அவரைத் தேடி கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெப்ரி மேலும்



