Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
ஹிந்தி படத்தில் அறிமுகமாகவுள்ள அக்ஷரா!
கமலின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன், உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசை யமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், எதிர்பாராத விதமாக, லக் என்ற இந்தி படம் மூலம் நடிகையாகிவிட்டார்.அவரைப் போலவே, இப்போது சினிமாவில் இயக்குனராவதற் காக, சில முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்று வந்த கமலின் இளைய மகள் அக் ஷராவும், ஒரு இந்தி படத்தில், ஹீரோயினாக நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அவரின் அக்கா ஸ்ருதியிடம், இதைப்பற்றி கேட்டால்,அப்படியா என, ஆச்சர்யப்படுகிறார். தங்கையின் திரையுலக விஷயத்தில், தான் தலையிடுவது இல்லை என்றும், அவர் கூறுகிறார். ஆனாலும், அக் ஷராவை, பாலிவுட் தயாரிப்பாளர்கள் மட்டு மல்லாமல், தெலுங்கு, தமிழ் தயாரிப்பாளர்களும், தங்கள் படத்தில் நடிக்கும்படி கூறி, துரத்த தொடங்கி விட்டனர்.



