Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

நான்கு பேரை கொலை செய்த விடுதலைப்புலி உறுப்பினருக்கு கடூழியச் சிறைத் தண்டனை :

விடுதலைப்புலிகளின் உறுப்பினராக செயற்பட்டு, நான்கு பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி கியான் என். குலதுங்க 30 மாத கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் அபராதமும் விதித்துள்ளார். 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் மூன்று மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மொனராகலை முப்பனை வெலிவத்தை பிரதேசத்தை சேர்ந்த சண்முகம் ஆனந்தராஜா என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தகிதி மற்றும் ஏப்ரல் 24 ஆம் திகதிகளில் புத்தல ஒக்கம்பிட்டிய வீதியில் புலிகளின் உறுப்பினர்களுடன் இணைந்து ஆர்.ஜீ.பத்திரண, கருணாசேன பந்துல, எம்.ஜீ.குணதிலக்க, துசித லங்கா ஆகியோரை கொலை செய்தமை தொடர்பில் சட்டமா அதிபர் மொனராகலை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

15 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை, இளம் வயது காலத்திலான அவரது விளக்கமறியல் தண்டனை மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் இணைந்து செயற்பட்டமை ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு நீதிபதி இந்த தண்டனையை வழங்கினார்.

About the Author

Posted by NIsha on 5:35 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 5:35 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "நான்கு பேரை கொலை செய்த விடுதலைப்புலி உறுப்பினருக்கு கடூழியச் சிறைத் தண்டனை :"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive