Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

கடன் தொல்லை காரணமாக சிந்து.


கடன் தொல்லை காரணமாக திரைப்படத் துணை நடிகை சிந்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிந்து. "அங்காடி தெரு', "பரதேசி' உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். இவை தவிர சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். சினிமா வட்டாரத்தில் உள்ள பலரிடம் சிந்து கடன் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. கடனைத் திருப்பித் தருமாறு அவர்கள் நெருக்கடி கொடுத்ததால், கடந்த சில நாள்களாக சிந்து மனவருத்தத்தில் இருந்ததாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு சிந்துவே மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிந்து சேர்க்கப் பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About the Author

Posted by NIsha on 10:32 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 10:32 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "கடன் தொல்லை காரணமாக சிந்து."

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive