Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
அஜீத், கார்த்திக்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகிறது ‘இரண்டாம் உலகம்’
மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். ஆர்யா-அனுஷ்கா நடித்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரிய வரவேற்பும் எதிர்பார்ப்பும் உண்டு. அந்த வகை எதிர்பார்ப்பு இரண்டாம் உலகம் படத்திற்கும் உள்ளது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்த இந்த படத்தை பி.வி.பி. சினிமாஸ் 60 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது.
படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்களாம். ஆந்திரா மற்றும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ஜார்ஜியாவில் படமாக்கப்பட்ட படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இப்படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜுடன், செல்வராகவன் முதன்முறையாக கைகோர்த்துள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை விட ‘இரண்டாம் உலகம்’ படத்தில் பத்து மடங்கு அளவிற்கு கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி, ஜார்ஜியன், ரஷ்யன், உஸ்பெக், துர்கிஷ் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. ஏற்கெனவே தீபாவளி ரேஸில் அஜீத்தின் ஆரம்பம், கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா படங்கள் உள்ளன. தற்போது அந்த போட்டியில் இரண்டாம் உலகம் திரைப்படமும் இணைந்துள்ளது.