Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 09, 10 ஆகிய தினங்களில்!
வடக்கு வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப் பதிவுகள் இம்மாதம் 09, 10 அகிய இரு தினங்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
தெரிவத்தாட்சி அதிகாரியொருவரின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த வாக்குப் பதிவு நடவடிக்கைகளை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் கட்சிகளின் பிரதிநிதிகளும் மேற்பார்வை செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் வாக்களிப்பதற்காகச் செல்லவேண்டிய இடம் நேரம் போன்ற விபரங்கள் உரிய அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் இம்மாதம் 12, 13, 14 ஆகிய தினங்களில் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் கடமை நேரத்தில் வாக்களிக்க முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.