Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கும் சந்தானம்!

சந்தானம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கவிருக்கிறாராம். இன்றைய தேதியில் அதிகம் கிராக்கி உள்ள காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சந்தானம் மீது கோலிவுட் ஹீரோக்கள் பலர் கடுப்பில் உள்ளார்களாம். 

நாம் ஒரு படத்தில் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறாரே என்று ஹீரோக்கள் காட்டமாக உள்ளார்களாம். இப்பொழுது அவர்கள் வயிறு ரியும்படி சந்தானம் ஒன்றை செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குகிறாராம். 
தற்போது கோலிவுட்டில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. முன்பு பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆர்டர் கொடுத்தபோது அதை ஓட்ட உங்களுக்கு தகுதி இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் சந்தானம் தமிழக மக்களை சிரிக்க வைக்கிறார் என்ற தகுதியை வைத்து அவருக்கு காரை விற்கிறதாம். 


 தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வாங்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Posted by NIsha on 7:47 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 7:47 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கும் சந்தானம்!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive