Headlines
Published On:Friday, September 6, 2013
Posted by NIsha

தூக்கக்குறைபாடு உள்ளவர்கள் கவனக் குறைபாட்டைக் கொண்டிருப்பர்.


தூக்கக்குறைபாடு உள்ளவர்கள் கவனக் குறைபாட்டைக் கொண்டிருப்பர்.

தூக்கக் குறைபாடு உள்ளவர்களின் மூளையின் செயற்பாடு சாதரணமாக  நன்கு தூங்குபவர்களின் மூளையின் செயற்பாட்டை விட வேறுபட்டிருப்பதாக மூளை ஊடு கதிர்ப்படங்கள் காட்டுகின்றன. தூக்கக் குறைபாடுள்ளவர்கள் ஞாபகக  ஆற்றல் தேவைப்படும் தேர்வுகளில் ஒருமித்து புலனை செலுத்தி கவனிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக California, San Diego பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் Sleep எனப்படும் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவதோடு குறைவான நேரம் தூங்குவது காரணமாக அவர்கள் பகலில் தூண்டல்களிற்கு துலங்கல்களைக் காட்டுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதுடன் நினைவாற்றல் சம்பந்தமான இடர்ப்பாடுகளையும் எதிர்கொள்வதாக குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்விற்காக தூக்கக் குறைபாடுள்ளவர்கள் 25 பேரும் நன்றாக தூங்குவார்கள் 25 பேரும் பயன்படுத்தப்பட்டதுடன் தொடர்சியாக கடினப்பாங்கை அதிகரித்த வண்ணம் அவர்களை நினைவாற்றலுக்காகப் பரீட்சித்தபோது எடுக்கப்பட்ட அவர்களின் மூளையின் MRI scanகளும் ஆய்விற்குட்படுத்தப்பட்டன. நினைவாற்றலை சோதிக்கும் பரீட்சைகளின் போது தூக்கக் குறைபாடுள்ளவர்களின் மூளையின் ஞாபக ஆற்றலுடன் தொடர்புடைய பகுதிகள் செயற்படுத்தப்படாமலும் கவனச்  சிதைவதைத் தவிர்ப்பதற்காக  குறித்த பணியுடன் தொடர்பில்லாத பகுதிகளை செயலிழக்க செய்ய வேண்டிய அவசியம் இருந்தபோதும் அவை அவ்வாறு செயலிழக்கச் செய்யப்படாமலும் இருந்ததை அவர்களின் மூளையின் MRI scanகள் மூலம் காணக்கூடியதாக இருந்ததாக குறித்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே இந்த ஆய்வில் பெறப்பட்ட  தகவல்களின் படி தூக்கக்குறைபாடு உள்ளவர்கள் இரவில் இலகுவாக  தூங்கமுடியாது உள்ளதுடன் பகலில் அவர்களால் வினைத்திறனாக தொழிற்படவும் இயலாமல் உள்ளனர். தூக்கக் குறைபாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறிய போதிலும் தூங்கும் போது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட  இரண்டு குழுக்களினதும் நித்திரையின் தரம் ஒரே மாதிரியாகவே இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி முதலில் வந்ததா என்ற கேள்வி போன்று  தூக்கக் குறைபாடு உள்ளதாக கூறுபவர்களின் மூளையின் தொழிற்பாட்டில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே அவர்கள் தூக்கக்குறைபாட்டை எதிர்நோக்குகின்றனரா அல்லது தூக்கக் குறைபாட்டினால் மூளையின் குறித்த பகுதிகளின் தொழிற்பாடு பாதிக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை என்று குறித்த ஆய்வில் பங்கேற்ற இன்னொரு ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
www.tamilcinema4u.in

About the Author

Posted by NIsha on 10:54 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 10:54 AM. Filed under , . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "தூக்கக்குறைபாடு உள்ளவர்கள் கவனக் குறைபாட்டைக் கொண்டிருப்பர்."

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive