Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்MaruttuvaKurippukal



காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோ ஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படு கின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற் கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து , உட லுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொ ய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உட லின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோ குளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோ பயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகி றது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யு ம் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிக ரிக்க உதவுகிறது. அவை, அமிலத் தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சி யடையும் தீங்கு விளை விக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்க ளுக்கு சாதக மான, வெப்ப நிலையை பரா மரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக் கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்த நாக பற்றாக் குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற் படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பரு ப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வே ண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாம ல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றி ல் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன் மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின்நோய் எதிர்ப்பு தன்மை யை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவி ன் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டி னும் இருப்பதாக, தெரிய வந்துள்ள து. மேலும், இவற்றில், சிறந்த நோ ய் எதிர்ப்பு திறனான “சியாசான்தை ன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் 3 மடங்கு அதிக மாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளை விக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றா லும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்ட மின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள் ளன

About the Author

Posted by NIsha on 3:12 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 3:12 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்MaruttuvaKurippukal"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive