Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
கதையை கேட்டு ‘மிர்ச்சி’ செந்தில் அழுதுவிட்டார்: இயக்குனர் வெற்றி மகாலிங்கம்
மிர்ச்சி’ செந்தில் - விஜயலட்சுமி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வெண்நிலா வீடு’. இந்தப் படத்தை வெற்றி மகாலிங்கம் இயக்குகிறார். தன்ராஜ் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தை ஆதர்ஷ் ஸ்டுடியோ சார்பில் பி.வி.அருண் தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார் கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து. ‘வெண்நிலா வீடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட, அதனை இயக்குனர் சேரன் பெற்றுக் கொண்டார். மேலும் விழாவில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு உள்பட பிரபலங்கள் பல கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு வெற்றி மகாலிங்கம் கூறியதாவது: படத்தின் கதையை கேட்ட நடிகர் ‘மிர்ச்சி’ செந்தில், கதையின் பாதிப்பால் அழுதுவிட்டார். அதேபோல் இப்படத்தில் 2 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க நடிகை விஜயலட்சுமியை அணுகியபோது, முதலில் அவர் ரொம்பவும் யோசித்தார். பிறகு நான் கதையைச் சொன்னதும், ‘இந்தக் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார்’ .
படம், பெண், பொன், மண் இவற்றால் ஒரு மனிதன் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதைப் பற்றிச் சொல்லும் ஒரு குடும்பச் சித்திரமாக இருக்கும் என்றார் அவர்.