Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

விஸ்வரூபம் – 2′ படத்துக்கும் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு : அப்போ… படம் ‘கன்பார்ம் ஹிட்’டுதானே..?


‘விஸ்வரூபம் – 2′ படத்துக்கும் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு : அப்போ… படம் ‘கன்பார்ம் ஹிட்’டுதானே..? வந்த வேகத்தில் ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ ஓடி பெட்டிக்குள் சுருண்டிருக்க வேண்டிய விஸ்வரூபம் படத்தை எதிர்த்ததன் மூலம் அந்தப்படத்துக்கு கமலை உற்சாகமாக 100-வது நாள் போஸ்டர் ஒட்ட வைத்தனர் முஸ்லிம் அமைப்பினர். அவரும் அந்த தெம்பில் ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்து விட்டார். முதல் பாகத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டின. இதையடுத்து படத்துக்கு அந்தப்படத்துக்கு தமிழக அரசு திடீரென்று தடை விதித்தது. உடனே பிரச்சனை கோர்ட் வரை சென்று படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிய பிறகு படம் ரிலீஸாகி கன்பார்ம் ஹிட்டானது. தற்போது அதுபோலவே கமலின் ‘விஸ்வரூபம் 2’ படமும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படும் இந்த ‘விஸ்வரூபம் 2′ படத்துக்கும் முஸ்லிம் அமைப்பினர் தற்போது கடும் எதிப்புகளை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். அதில் முதலாவதாக இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி ‘விஸ்வரூபம் – 2′ படத்துக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கமலஹாசன் நடித்து இயக்கி வரும் ‘விஸ்வரூபம் பார்ட்–2′ தீபாவளிக்கு வர இருப்பதாகவும், ‘விஸ்வரூபம்’ படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல. யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கஃபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை படைப்பாளியான கமல் புரிந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2’ திரைப்படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புறம் என்ன கமல் சார் கவலையே படாதீங்க.., படம் கன்பார்ம் ஹிட்டு தான்.

About the Author

Posted by NIsha on 6:51 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:51 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "விஸ்வரூபம் – 2′ படத்துக்கும் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு : அப்போ… படம் ‘கன்பார்ம் ஹிட்’டுதானே..?"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive