Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
“குட்டைப்பாவாடை போடச்சொல்லி வற்புறுத்தினாங்க” : பரபரப்பை கிளப்பும் ‘மாஜி’ நடிகை மதுபாலா?
சுமார் 15 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் ரீ-எண்ட்ரி போடுகிறார் நடிகை மதுபாலா.
1990–களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மதுபாலா. தமிழில் இவர் நடித்த ‘ரோஜா’, ‘ஜென்டில் மேன்’, ‘பாஞ்சாலங்குறிச்சி’ ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதன்பிறகு 1999-ல் திருமணம் செய்துகொண்டு கணவர் ஆனந்தஷாவுடன் குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவருக்கு தற்போது இருமகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘ஒத்தக்கல்லு’ என்ற படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார் மதுபாலா.
“நான் நடிகையாக இருந்தபோது ரொம்ப கஷ்டப்பட்டேன்” என்று பரபரப்பை கிளப்பியிருக்கும் அவர், என்னை பல டைரக்டர்கள் குட்டைப்பாவாடை அணியச்சொல்லி வற்புறுத்தினார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
“நான் நடிகையாக இருந்த போது ரொம்ப கஷ்டப்பட்டேன். குட்டைப்பாவாடை அணியச் சொல்லி டைரக்டர்கள் பலர் நிர்ப்பந்தித்தனர். என் உடம்புக்கு அது சரிப்படாது என்று மறுத்தேன். ஆனாலும் அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை. இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன். டைரக்டர்கள் பாலச்சந்தரும், மணிரத்னமும் தான் என்னை புரிந்து கொண்டு என் உடம்புக்கு ஏற்ற ஆடைகளை அணியச் செய்தனர்.
திருமணத்துக்கு பிறகு நான் நடிக்கவில்லை. என் கணவரை நண்பர் மூலம் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தேன். காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு இருமகள்கள் உள்ளனர்.
நான் மீண்டும் தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க கமிட்டாகியுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கு படங்களிலும் நடிப்பேன்.”என்று கூறியிருக்கிறார் மதுபாலா.
வெல்கம் டூ தமிழ்சினிமா மது மேடம்.