Headlines
Published On:Friday, September 6, 2013
Posted by NIsha

2013 அரச இசை விருது வழங்கல் விழா 12ஆம் திகதி!



இசைக் கலை வளர்ச்சிக்கு முன்னோடியாக இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக திறந்த இசை படைப்புகளை வழங்கிய இசைக்கலைஞர்களை கௌரவப்படுத்தி அவர்களுக்கு விருது வழங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதன்படி கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக்கழகம், அரச இசைக் குழு ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் இரண்டாவது அரச இசை விருது, வழங்கல் விழா 2013 இம்மாதம் 12 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு  இளைஞர் சேவைகள் மன்றத்தில்  நடைபெறவுள்ளது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள 2013 அரச இசை விழா விருது வழங்கல் விழாவில்,  விருதுக்கு 2011 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் வெளிவந்த படைப்புகளுக்காக விருதுகள் வழங்கப்படவுள்ளது.

சிறந்த பாடல் (ஆண்) தனி சிறந்த பாடல் (பெண்) தனி, சிறந்த பாடலாக்கல் மற்றும் இசையமைப்பு, சிறந்த பாடல் வரிகள் ஆக்கம், சிறந்த திரை ஒளி ஆக்கம்; (இயக்கம்), சிறந்த இறுவெட்டு (தயாரிப்பு),சிறந்த சிறுவர் பாடல் (சிறுவன்) தனி,சிறந்த சிறுவர் பாடல் (சிறுமி) தனி, பிரபல சிறுவர் பாடல் வரிகள் ஆக்கம் (திறந்த),சிறந்த சிறுவர் பாடலாக்கல் மற்றும் இசையமைப்பு (திறந்த,

சிறந்த சிறுவர் திரை ஒளி ஆக்கம் (திறந்த)இயக்கம்,சிறந்த சிறுவர் இறுவெட்டு (தயாரிப்பு),சிறந்த கிராமிய பாடல் (ஆண்) தனி, சிறந்த கிராமிய பாடல் (பெண்) தனி,சிறந்த கிராமிய பாடல் நவீன வடிவம், சிறந்த வானொலி இசை நிகழ்ச்சி, சிறந்த குழு பாடல். ஆகிவற்றுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

அதுதவிர இசைத்துறை இலங்கையில் மிளிரச்செய்த பிரபல இசை கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

About the Author

Posted by NIsha on 7:06 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 7:06 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for " 2013 அரச இசை விருது வழங்கல் விழா 12ஆம் திகதி!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive