Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

உடலுக்கு ‘கைக்குத்தல் அரிசி’யே சிறந்தது! சமையல் குறிப்பு




அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவை யான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழ மொழியை நாம் அறிந்திருப்போம். எந்த வொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற் படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவி லேயே இருக்கிறது என்பதை பலர் அறிந் திருக்க மாட்டார்கள்.

 இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என் கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உண விற்கும் உண்டு. தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் அதன் பல ன்கள் அனைத்தும் சரிசமாக உடலு க்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியா வில் கேரளாவிலும், இலங்கை யிலும் மட்டுமே அதிகம் பயன்படு த்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்ட து. முன்பு மாதிரி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரிய தாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இரு ந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலே யே விளையும் நெல் வகைகளை யே அதிகம் உற்பத்தி செய்கின்றன ர்.

இவ்வகை பயிர்கள் அதிக விளைச் சலைக் கொடுக்கின்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ் வகை பயிர்கள் மிகவும் உதவியா க உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலிஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாக வும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கி ன்றனர்.

சம்பா எனப்படும் அந்த அரிசி கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ் சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச் சம்பா, கைவரைச் சம் பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றி மணிச் சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங் கள் பற்றி, உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப் படுத்துகின்றனர். நெல் மணி யை நீர்விட்டு அவித்து காய வைத்து உரலில் வைத்து குத்தி உமி யை நீக்கினால் அது புழுங்கல் அரசி. நெல்லை வேக வைக்கா மல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச் சரிசி.

கைக்குத்தல் அரிசியின் மருத் துவப் பயன்கள்

எளிதில் சீரணமடையும்

மலச்சிக்கலைப் போக்கும்

சிறுநீரை நன்கு பிரிக்கும்

இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர் வைக் கொடுக்கும்

பித்த அதிகரிப்பை குறைக்கும்

நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது

 உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கு ம் வாத பித்த, கபத்தை அதனதன் நிலை யில் வைத்திருக்கும் கைக் குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலிஷ் செய்யாத அரிசியை வாங் கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்று மில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக் குத்தல் அரிசி சிறந்தது. பாலிஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Posted by NIsha on 3:06 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 3:06 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "உடலுக்கு ‘கைக்குத்தல் அரிசி’யே சிறந்தது! சமையல் குறிப்பு"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive