Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

“அமெரிக்க செயலர் ஜான் கெரி, ஒரு பொய்யர்” போட்டு தாக்கி அதிர வைத்த ரஷ்ய ஜனாதிபதி புடின்!



“அமெரிக்க செயலர் ஜான் கெரி, ஒரு பொய்யர்” போட்டு தாக்கி அதிர வைத்த ரஷ்ய ஜனாதிபதி புடின்!

“அமெரிக்க ராஜாங்க செயலர் (Secretary of State) ஜான் கெரி, ஒரு பொய்யர்” என்று கூறி அதிர வைத்திருக்கிறார், ரஷ்ய ஜனாதிபதி புடின். சிரியா தொடர்பாக அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அதிகரிக்கும் விதத்தில் வெளியாகியுள்ளது இந்த காமென்ட்!

ஜான் கெரி, “சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்புடன் இணைந்து யுத்தம் புரியும் ஆட்களில், அல்-காய்தா தீவிரவாத அமைப்பினர் இல்லை” என்று செனட் கமிட்டியில் தெரிவித்திருந்தார்.

அதாவது, சிரியா அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பினரை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கு, அந்த அமைப்பினருடன் அல்-காய்தா ஆட்களும் கைகோர்த்து யுத்தம் புரிவது சங்கடமான விஷயம் என்பதால், ‘அதெல்லாம் ஒன்றும் இல்லையே’ என்று ஒரேயடியாக மறுத்த ஸ்டேட்மென்ட் அது!

ஜான் கெரி செனட் கமிட்டியில் பேசியபோது, “சிரியா அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் ஆட்களில் பெரும்பான்மையினர் தீவிரவாத அமைப்பினர் என்பது உண்மையல்ல. அவர்களில் சுமார் 15-25 சதவீதம் மட்டுமே தீவிரவாதிகள் – அல்-காய்தா ஆதரவு ஜப்ஹாத் அல்-நுஸ்ரா தீவிரவாத இயக்கத்தினர் உட்பட – இருக்கலாம். அவர்களும் வெவ்வேறு குரூப்களாக உள்ளார்கள். தீவிரவாத குரூப்கள், யுத்தத்தில் ஈடுபடவில்லை, தங்களுக்கு உள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள்” என்றும் தெரிவித்திருந்தார்.

G20 மாநாட்டுக்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கூடியுள்ள உலக நாடுகளின் தலைவர்களிடையே பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், “ஜான் கெரி ஒரு பொய்யர். அவர் சொல்வது அப்பட்டமான பொய் என்பது அவருக்கே தெரியும். சிரியா ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் ஆட்களில், அல்-காய்தா ஆதரவு ஜப்ஹாத் அல்-நுஸ்ரா தீவிரவாத இயக்கத்தினர் உள்ளார்கள் என்பது அமெரிக்க உளவுத்துறைக்கும் நன்றாக தெரியும், ஜான் கெரிக்கும் நன்றாக தெரியும்.

சிரியா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த உண்மையை ஒரேயடியாக மறைத்து பொய் சொல்கிறார் அமெரிக்க ராஜாங்க செயலர் ஜான் கெரி” என்று வெளிப்படையாகவே போட்டுத் தாக்கியுள்ளார்.

சரி. ஒரு பேச்சுக்கு சுமார் 15-25 சதவீதம் மட்டுமே தீவிரவாதிகள் என்று வைத்துக் கொண்டாலும், போராளி அமைப்பினருக்கு அமெரிக்கா செய்யும் உதவிகள் (ஆயுத வழங்கல் உட்பட), இந்த 15-25 சதவீத தீவிரவாதிகளையும் சென்றடையுமே! அது ஓகேவா?

About the Author

Posted by NIsha on 5:27 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 5:27 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "“அமெரிக்க செயலர் ஜான் கெரி, ஒரு பொய்யர்” போட்டு தாக்கி அதிர வைத்த ரஷ்ய ஜனாதிபதி புடின்!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive