Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
ஈராக்கின் தொழில் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கை விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஈராக்கின் தொழில் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சர் நசார் அல் ருபெய் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் நிலவிய மட்டத்திலேயே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இணக்கம் தெரிவித்துள்ள ஈராக் அமைச்சர் நசார் அல் ருபெய், ஈராக்குடன் மீண்டும் தூதரக உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் நிர்மாணத் துறைகளில் பாரிய கேள்வி நிலவுவதாக தெரிவித்துள்ள அல் ருபெய், தமது நாட்டின் நிர்மாணத் துறையின் முன்னேற்றத்திற்கு உதவுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
நிர்மாணத்துறையில் நீண்டகால அனுபவத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், இலங்கையின் நிர்மாணத்துறை வர்த்தக நிறுவனங்களினால் ஈராக்கிற்கு உதவிகளை மேற்கொள்ள முடியும் என இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.



