Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

சுவிட்சர்லாந்து சொலதூர்ன் நகரில் "ஆடுகளம்" அனைத்துலக நடனப் போட்டி (செப்டம்பர் 08 ஆம் நாள்)


சுவிட்சர்லாந்து சொலதூர்ன் நகரில் "ஆடுகளம்" அனைத்துலக நடனப் போட்டி (செப்டம்பர் 08 ஆம் நாள்) நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை மூன்றாவது முறையாக இவ்வாண்டு நடாத்தவுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் சொலதூர்ன் நகரில் செப்டம்பர் 08 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாபெரும் நடனப் போட்டியில் தற்சமயம் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, மலேசியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்து நடனக் குழுக்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளன. பல நூற்றாண்டுகளாக உணர்வுகளை வெளிப்படுத்தவும் கதைகளையும் நல்ல கருத்துகளையும் கூறவும் சமூகங்களை ஒள்றிணைத்து உருவாக்கவும் நடனக் கலை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அக்கலையை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இளையோர் ஆர்வத்தோடும் பெருவிருப்போடும் பயின்று, அதில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அவ்வாறான இளையோரை இணைத்து, அவர்களின் ஆற்றலை கண்டறிந்து, அவர்களுக்கு ஓர் உலகளாவிய அரங்கினை அளிக்கும் முகமாக 'ஆடுகளம்' நடாத்தப்பட்டு வருகின்றது. ஆடுகளத்தின் கருப்பொருளாக 'தமிழ் மொழி' இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை தொடர்ந்து எமது மொழியை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை தமிழ் இளையோர் உணர்ந்திருக்கின்றனர். ஆகையால், தமிழ் மொழி என்னும் கருப்பொருள் ஊடாக எமது இளையோர் தமது உணர்வுகளை நடனம் மூலம் வெளிக்காட்ட ஆடுகளம் வாய்பாளிக்கும். மேலும் இவ்வருடம் லங்காசிறியின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் அரங்கேற இருக்கின்றது. லங்காசிறியின் குண்டக்க மண்டக்க நிகழ்ச்சியும் நிகழ்வை அலங்கரிக்கும்.

About the Author

Posted by NIsha on 6:17 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:17 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "சுவிட்சர்லாந்து சொலதூர்ன் நகரில் "ஆடுகளம்" அனைத்துலக நடனப் போட்டி (செப்டம்பர் 08 ஆம் நாள்)"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive