Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
சீனாவில் 40 கோடி பேருக்கு அதிகாரபூர்வ மொழியைப் பேச தெரியாது
சீனாவில் 40 கோடி பேருக்கு அந்நாட்டின் அதிகாரபூர்வ மொழியைப் பேச தெரியாது என்று சீன அரசே தெரிவித்திருக்கிறது.இன்னும் சிறிது காலத்தில் இந்த மொழியை யாரும் பேச முடியாத நிலையும் கூட உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. உலகின் மிகப் பெரிய நாடு... அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.. சீனா.
சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இருப்பது என்ன தெரியுமா? மேன்டரின். பல்லாயிரம் சீன வட்டார மொழிகளுக்கு இடையே ஒரு தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மேன்டரின் உருவாக்கப்பட்டது.
ஆனால் மேன்டரின் மொழியை விட தங்களது வட்டார மொழிக்கே அந்நாட்டு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி அரசோ, மேன்டரினையே முன்னிலைப்படுத்துகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சீனா அதிகாரிகள், ஒருகாலத்தில் மேன்டரினை இந்த நாட்டில் யாருமே பேச முடியாத நிலையும் உருவாகலாம் என்கின்றனர்.
சீனாவின் கல்வி அமைச்சக செய்தித் தொடர்பாளரோ, நாட்டின் 70% மக்கள்தான் மேன்டரினை பேசுகின்றனர். அவர்களில் பலரும் அதை மோசமாகவே பேசுகின்றனர்.
எஞ்சிய 30% அல்லது 40 கோடிப் பேரால் மேன்டரினை பேச முடியவில்லை என்றார்.


