Headlines
Published On:Friday, September 6, 2013
Posted by NIsha

ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைச்சிப்பாய் பலி! 7 பொதுமக்கள் படுகாயம்

கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் நேற்று இரவுஇடம்பெற்ற வாகன விபத்தில் படைச்சிப்பாய் ஒருவர் பலியானதுடன், 7பொது மக்கள் படுகாயமடைந்த நிலையில் கிளி.மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

மாலை 8மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நோக்கி வவுனியா மாவட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தை முந்திச்செல்ல இராணுவத்தினரின் உழவு இயந்திரம் முற்பட்டுள்ளது.

இதன்போது எதிரே யாழ்.பருத்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் உழவு இயந்திரத்துடன் மோதி பின்னர் தனியார் பேருந்துடனும் மோதி புரண்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சமயம் இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் 38பயணிகள் இருந்துள்ளனர். இதில் 4பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோன்று தனியார் பேருந்தில் 35பயணிகள் இருந்துள்ளனர் இதில் 3பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உழவு இயந்திரத்தைச் செலுத்திவந்த படைச்சிப்பாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



About the Author

Posted by NIsha on 3:18 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 3:18 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைச்சிப்பாய் பலி! 7 பொதுமக்கள் படுகாயம்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive