Posted by NIsha | Saturday, August 31, 2013 |
Posted in
Tamil Vinthai news
ஒருவரை இரண்டு வருடங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்த 62 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி வென்னப்புவ பிரதேசத்தில் தனது தாய் மற்றும் சகோதரிகள் இருவருடன் வாடகை வீடொன்றில் வசித்து வருகின்றார். அந்த வீட்டின் உரிமையாளரே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து கடந்த 29ஆம் திகதி வரை சந்தேகநபரால் பல சந்தர்ப்பங்களில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அவரின் தாயார் வென்னப்புவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மாரவில வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Posted by NIsha | |
Posted in
worldNews

சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இச்சண்டையில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் போராளிகள் பகுதியில் அதிபர் படையினர் விசக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவின் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்க தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனால் பயந்துபோன சிரியா மக்கள் குழந்தைகளையும் கையில் கிடைத்த பொருட்களையும் எடுத்துக்கொண்டும் பக்கத்து நாடான லெபனனுக்கு தப்பி ஓடுகின்றனர். இவர்கள் அனைவரும் ஐ.நா. ஆய்வாளர்களை பின் தொடர்ந்து மஸ்னா எல்லை வழியாக லெபனன் நாட்டிற்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். சிரியாவிலிருந்து வரும் அகதிகள் வருவதற்கு அருகிலுள்ள நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by NIsha | |
Posted in
worldNews

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடெனுக்கு ஜெர்மனி நாட்டு அமைப்பின் ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சங்கமும், அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச வழக்குரைஞர் சங்கத்தின் ஜெர்மனி பிரிவும் சேர்ந்து ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசை 1999ஆம் ஆண்டு உருவாக்கின. இந்த ஆண்டுக்கான இப்பரிசுக்கு அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடென் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெர்லினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் இப்பரிசு வழங்கப்பட்டது. ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஸ்னோடென் சார்பில் அவரது நண்பர் இப்பரிசைப் பெற்றுக் கொண்டார். ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத அமெரிக்காவின் கண்காணிப்புப் பணிகளை துணிச்சலாக அம்பலப்படுத்தியதற்காக ஸ்னோடெனுக்கு இப்பரிசு வழங்கப்படுவதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் பிரபல பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டும் கலந்து கொண்டார். ஸ்னோடென் அனுப்பி வைத்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகளின் மிகவும் ரகசியமான ஆவணங்களைக் கொண்டு பல்வேறு கட்டுரைகளை "கார்டியன்' பத்திரிகையில் எழுதியுள்ளார். அவர், அமெரிக்காவின் உளவு வேலைகளை அம்பலப்படுத்துவதற்கு ஸ்னோடென் துணிச்சலாக எடுத்த முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார்.
Posted by NIsha | |
Posted in
விந்தை உலகம்
கடல் வாழ் உயிரினமான மீன்கள் பொதுவாகவே நீந்தும் வல்லமை கொண்டவை. இந்நிலையில் காலால் நடக்கும் அபூர்வ சுறா மீன்கள் இருப்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த அதிசய சுறா மீன்கள் இந்தோனேசியாவின் கிழக்கு கடலில் வாழ்கின்றன. உடலுக்கு அடியில் இருக்கும் சிறிய கால்கள் மூலம் இவை கடலின் தரையில் நடந்து செல்கிறது. இது அதிகபட்சம் 80 சென்டி மீட்டர்(2½ அடி) நீளம் மட்டுமே வளரக்கூடியது, மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத சாதுவான பிராணி என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Posted by NIsha | |
Posted in
India tamil news

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கைலாசபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மனுவேல்ராஜ் (வயது 53). இவர் சாத்தான்குளத்தில் மண்பானை, சட்டி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஜென்சி(வயது 22). கடந்த 20-ந்தேதி நாசரேத் வாரச்சந்தைக்கு சென்ற ஜென்சி வீடு திரும்பவில்லை. திடீரென மாயமான அவரை, அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் நாசரேத் பொலிஸசில் தந்தை மனுவேல்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதில் ஜென்சியை, அவர் வசித்து வந்த தெருவை சேர்ந்த ஜட்சன்(27) என்பவர் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடினர். பின்பு ஜட்சனிடமிருந்து ஜென்சியை மீட்டனர். ஜென்சி போலீசில்அளித்த வாக்குமூலத்தில், `தன்னை ஜட்சன் கடத்தி கற்பழித்து கட்டாயப்படுத்தி பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும், வேறு யாரை திருமணம் செய்தாலும் உன்னை நிம்மதியாக வாழவிட மாட்டேன்' என மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார் ஜட்சனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் ஜெயிலில் அடைத்தனர். பின்பு ஜென்சிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர். இட்டமொழியைசேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று(30-ந்தேதி) ஜென்சியின் தந்தை மனுவேல்ராஜ், தாய் மல்லிகா ஆகியோர் சாத்தான்குளத்தில் வாடகைக்கு வீடு பார்க்க சென்றனர். வீட்டில் ஜென்சியும், அவரது அண்ணன் ஜெபஸ்டினும் இருந்தனர். அப்போது அண்ணன் ஜெபஸ்டினை முட்டை வாங்கி வருமாறு கூறினார். இதனையடுத்து அவர் கடைக்கு சென்றார். அந்த நேரத்தில் ஜென்சி அறையை பூட்டிவிட்டு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார். கடைக்கு சென்றுவிட்டு சிறிதுநேரம் கழித்து ஜெபஸ்டின் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பூட்டிய அறையில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு ஜென்சி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாசரேத் போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தன்னை கடத்தி கற்பழித்து கட்டாய திருமணம் செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக ஜென்சி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபரால் கடத்தி கற்பழிக்கப்பட்டு கட்டாய திருமணம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாசரேத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news
அமிதாப் பச்சான், அஜய் தேவ்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டடோர் நடிக்கும் இந்திப் படம் சத்யகிரகா. இப்டத்தை பிராகாஷ் ஜா இயக்குகிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அஜய் தேவ்கானும், கரீனாவும் நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்தது. இந்த காட்சியில் முத்தமிட்டால் காடசி தத்ரூபமாக இருக்கும் என்று இயக்குனர் கூறினார். ஆனால், முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என கரீனா கண்டிசனாக கூறிவிட்டாராம். கணவராக இருந்தாலும் சினிமாவில் இனி யாருடனும் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என முடிவு எடுத்துள்ளதுதான் மறுப்புக்கு காரணமாம். ஏற்கனவே ஓம்காரா படத்திலும் அஜய்தேவ்கானுடனும், 3 இடியட்ஸ் படத்தில் அமீர்கானுடனம் நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கரீனா கபூர் இந்தி நடிகர் சாயிப் அலிகானை திருமணம் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news

ajith1-370x260 (1)துணிச்சல் என்றால் பேசாமல் அதற்கு அஜீத் பெயரை உடனே சொல்லி விடலாம். படம்தானே? பேசாமல் டூப் போட்டு நடிக்கலாம் என்றில்லாமல் நிஜமாகவே ரிஸ்க் எடுத்து நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே தான். அப்படித்தான் ‘வீரம்’ படத்தில் ஓடும் ரயிலில் தொங்கியபடியே காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார் அஜீத். ‘ஆரம்பம்’ படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிப்பில் தயாராகி வரும் படம்தான் ‘வீரம்’. ‘சிறுத்தை’ சிவா டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். ‘ஆரம்பம்’ படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதால் இப்போது ‘வீரம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அஜித். ஃபுல் ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளும் கொஞ்சம் அதிகமாகவே உள்ளதாம். அஜீத் பெரும்பாலும் தான் நடிக்கும் படத்தின் சண்டைக்காட்சியில் ‘டூப்’ போடுவதில்லை. அதேபோல் இந்த படத்திலும் ஒரு காட்சியில் ‘டூப்’ இல்லாமல் நடித்துள்ளார். வீரம் படப்பிடிப்பு சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ஓடும் ரெயிலில் வெளியே தொங்கியபடி ஒரு காட்சியில் அஜீத் நடிக்க வேண்டியிருந்தது. டைரக்டர் சிவா டூப் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் அஜீத்தோ டுப்பெல்லாம் வேண்டாம், நானே நடிக்கிறேன் என்று தைரியமாக கூறி சொன்னபடி டூப் போடாமல் அந்தக் காட்சியில் நடித்து அசத்தினாராம். அஜீத்தின் இந்த துணிச்சலை பார்த்த வீரம் படக்குழுவினர் ஆச்சரியப்பட்டு அவரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
Posted by NIsha | |
Posted in
India tamil news
மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்ற சட்டமானது கொண்டுவரப்பட்டுள்ளது. மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது. செஹோர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த புதிய சட்டமாம்.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news

தமிழில் டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சார்மி. அதன்பின் ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும் அந்த படங்கள் சரியாகப் போகாததால் தமிழில் அவருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு அவர் கவர்ச்சியாக நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகியதால் தெலுங்கில் நிறைய படங்கள் வந்தன. அதனால் அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சார்மி பிரசித்தி கந்தா, ரம்பா ஊர்வசி மேனகா, மந்த்ரா 2 ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வரும் சார்மிக்கு அவர் நடித்துள்ள பிரேம ஒகமாலிகம் என்ற படம் நேற்று ஆந்திராவில் ரிலீசானது. இந்த நிலையில் டைரக்டர்கள் பலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். என் சினிமா வாழ்க்கையில் பலர் என்னை ஏமாற்றியுள்ளனர். சில டைரக்டர்கள் மோசடித்தனமாக நடந்துள்ளனர் என்றும் அடுத்தடுத்து புகார் பத்திரம் வாசித்திருக்கிறார் சார்மி. இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : “‘மாயகடு’ என்ற தெலுங்கு படத்தில் நான் நடித்த போது அந்தப்படத்தின் டைரக்டர் எனக்கு தெரியாமலேயே என்னை ஆபாசமாக படம் பிடித்தார். படம் ரிலீஸானவுடன் அதை பார்த்த போது அதிர்ந்து போனேன். என்னுடைய அங்க அசைவுகளை வக்கிரமாக படமாக்கி இருந்தார்.” என்று அந்தப் பட டைரக்டரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் சார்மி
Posted by NIsha | |
Posted in
India tamil news

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் மாதம் 16-ந் தேதியன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். எஞ்சிய 5 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் அது தொடர்பான விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிறார் குற்றவாளிக்கான தண்டனை என்ன என்ற தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையின் போது பலாத்கார வழக்கில் சிறுவன் குற்றவாளி என்றும் அவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்ய முடிவு! ஆனால் இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று மருத்துவ மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Posted by NIsha | |
Posted in
Tamil Vinthai news

பொதுவாக பெண்களைத் திருப்திப்படுத்துதல் மிகவும் கடினமான செயல் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆண்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் நெடுநாட்களுக்கு பெண்கள் மனதில் நீடித்து நிற்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், அவர்களது இதயத்தைத் தொடுவதுதான். பெண்களின் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள் என்றால், மீதமுள்ள காரியங்கள் எவையும் கடினமல்ல. பெரும்பாலான இளைஞர்கள் தமது காதலிகளுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வாங்கிப் பரிசளித்தல் மட்டுமே, அவர்களது இதயத்தில் இடம் பெற ஒரே வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம், பரிசளித்தல் நல்லது தான். ஆனால் உண்மையான இதயத்தையும், அன்பையும் பரிசளித்தால், அவற்றின் பிரகாசத்திற்கு முன் இதர பரிசுப் பொருட்கள் எல்லாம் மங்கிவிடும். முதலில் காதலியின் இதயத்தை வெல்ல மிக எளிதான வழி என்ன தெரியுமா? அவர் உண்மையிலேயே எப்படிப்பட்ட குணாதிசயம் உள்ளவர் என்பதைப் புரிந்து கொள்வது தான். பெண்களின் உள்ளத்தில் உள்ளதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்று ஆண்கள் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பெண்களைப் புரிந்து கொள்வதுடன் அவர்களது உள்ளத்தோடு உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். ஆண்கள் எதையும் நேரடியாகப் பேசிவிடுவார்கள். ஆனால், பெண்களோ எல்லாவற்றையும் மறைமுகமாக உணர்த்துவதையே விரும்புவார்கள். ஆகவே உங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு இணைப்புப் புள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். இறுதியாக இளைஞர்களே! நீங்கள் உங்களது செக்ஸ் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கொஞ்சம் காலத்திற்கு அடக்கியே வைத்திருங்கள். செக்ஸ் என்பது உறவின் ஆழத்தை அதிகப்படுத்தும் என்பது உண்மை தான். ஆனாலும், உறவின் மையமாக அது ஆகி விடக் கூடாது. உடல் சார்ந்த இன்பம் மட்டும் தான் உங்களுக்கு மிகவும் முக்கியம் என்பது போன்ற தோற்றத்தை, நீங்கள் உங்கள் காதலியின் மனதில் உண்டாக்கி விடக் கூடாது. அது உங்களது உறவை வளர்ப்பதற்கு ஒருபோதும் துணையாக நிற்கப் போவதில்லை. மேலும் காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிப்பதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைக் கீழே பட்டியலிடுகிறோம். அவற்றைப் படித்து உங்கள் உறவை மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள் . நல்ல பாதுகாப்பாக இருப்பது பெண்கள் தமது காதலரிடமிருந்து பாதுகாப்பான, பத்திரமான உணர்வை எதிர்பார்க்கிறார்கள். அதற்காக நீங்கள், வலிமை நிறைந்த, சாகசக்காரராகவோ, சினிமா கதாநாயகன் போலவோ பலசாலியாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. தமது வார்த்தைகளைக் காப்பாற்றுகின்ற, சொன்ன சொல்லை உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்றுகின்ற ஆணைத் தான், ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறாள். அப்படிப்பட்ட ஆண்கள் தான் பெண்களைக் கவர்கிறார்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் சொல்வது மற்ற பெண்களை மயக்குகின்ற அழகிய தோற்றமோ அல்லது படுக்கையறையில் விளையாடும் விதவிதமான மன்மத விளையாட்டோ அல்லது ஆடம்பரமான சொத்துக்களோ, பெண்களது மனதைக் கவர்வது இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், உங்களது தன்னம்பிக்கையையும், எதையும் என்னால் செய்து முடிக்க முடியும் என்று நீங்கள் சொல்லும் தைரியத்தையும் தான். நம்பிக்கை வைத்திருப்பது உறவின் மிக முக்கியமான பிணைப்பு அம்சம் என்னவென்றால், நம்பிக்கை. நம்பிக்கையானது விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் சம்பாதிக்கப்பட வேண்டியது. எனவே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், உங்கள் காதலியிடம் உங்களது நம்பகத்தன்மையை புரிய வைத்துக் கொண்டேயிருங்கள். நீங்கள் எப்பொழுதுமே, எந்தச் சூழ்நிலையிலும் நம்பத் தகுந்தவர் என்பதை சொல்லத் தயங்காதீர்கள். மரியாதையுடன் நடத்துவது உங்களது காதலிக்குரிய மரியாதையை எப்போதும் அவருக்குக் கொடுங்கள். எந்த ஒரு பெண்ணும் தன்னையும், தனது உணர்வுகளையும், கருத்துக்களையும் மதிக்கும், ஒருவரது அன்பினை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவாள். அவருடன் இருப்பதையே மிகவும் விரும்புவாள். மேலும் அவள் எதிர்பார்க்கும் அளவுக்கு, அவளை மென்மையாக, காதலுடன் நடத்தும் ஒருவரது அன்பினையே எதிர்பார்க்கிறாள். அன்பை வெளிப்படுத்துவது வாழ்க்கையில், அதிலும் குறிப்பாக உறவுகளுக்கிடையே, பலரகமான ரசனைகளோடு கூடிய உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். பழைய கால முறைகளை மறந்துவிடுங்கள். புதிது புதிதாக எதையாவது யோசித்துக் கண்டுபிடித்து, அதனை நல்லதொரு நேரத்தில் உங்கள் காதலியிடம் வெளிப்படுத்துங்கள். உங்கள் காதலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதோ, படுக்கையிலிருக்கும் போதோ, துணிகளைத் துவைக்கும் போதோ, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி, அவரது அன்பை வெல்லுங்கள். இவ்வாறு வெளிப்படுத்தப்படும் உங்கள் அன்பு, அவருக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தரத்தக்கதாக இருக்க வேண்டும். உணர்வுகளை வெளிப்படுத்துவது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துதல் பெண்களுக்கு மட்டுமே உரியது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இளைஞர்களே, நீங்களும் உங்கள் உணர்வுகளை சொற்களாலும், செயல்களாலும் வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் அன்பிற்குரியவர்களது ஆடைப் பொருத்தம், தலை அலங்காரம் அல்லது அவர் அணிந்துள்ள புதிய நகைகளின் அழகு ஆகியவற்றைப் பாராட்டுதலாகக் கூட இருக்கலாம். அதிலும் அவர் உங்களது கருத்தைக் கேட்பதற்கு முன்பாக முந்திக் கொண்டு, அவற்றின் அழகைக் கூறுங்கள்
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

வாழ்வியலுடன் கூடியதான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்களை சரியாக இனங்கண்டு மக்கள் வாக்களிக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (31) இடம்பெற்ற உரும்பிராய் யோகபுரம் அண்ணா சனசமூக நிலையம் மற்றும் அண்ணா ஸ்ரார் விளையாட்டுக்கழக பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் வாழ்வியலுடன் கூடியதான அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பதில் நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். அந்தவகையில், நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் ஊடாக மக்களது வாழ்வியலும் அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்படும். அதுமட்டுமல்லாது மாகாண சபை முறைக்கூடாகவே எமது மக்களது வாழ்வாதாரமும் மேம்பாடு அடையக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இது தேர்தல் காலம் என்பதனால் பல்வேறு உதவிகளையும் நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளையும் வழங்கியவாறு பல்வேறு தரப்பினர் வாக்குகளை அபகரிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதுடன், வாக்குகளை அபகரித்ததன் பின்னர் காணாமற் போய்விடுவர். இந்நிலையில் மக்களோடு இருந்து மக்களுக்காய் பணிசெய்பவர்களை மக்கள் சரியான முறையில் இனம் கண்டு அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். வடமாகாணசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெறும்
பட்சத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 5 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வடமாகாணத்தை செல்வங்கொழிக்கின்ற குட்டிச் சிங்கப்பூராகவோ, குட்டி ஜப்பானாகவோ நிச்சயமாக மாற்றியமைப்போம். இதற்கான அரசியல் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கும் பட்சத்திலேயே அதுசாத்தியமாகுமெனவும் தெரிவித்தார். இதனிடையே குறித்த பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தன்னை வயல் வெளியில் மின்னல் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தாயான கந்தசாமி குவேந்தினி (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். மயிலந்தன்னை வயல் வெளியில் வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே நேற்று மாலை இவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகினார். இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் இவர் உயிரிழந்ததாக இவரது உறவினர்கள் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

போதைப் பொருள் கடத்தியவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் 250 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, கொழும்பு சுங்கப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். இந்தப் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளின் பின்னணியில் செயற்பட்டவர்களை அம்பலப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார். மீட்கப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 250 கோடி ரூபா எனத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்படைய செய்தி கொழும்பில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகரின் பெறுமதி 250 கோடியை தாண்டும்: சுங்க அதிகாரிகள் இலங்கையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் இரு மலேசியர்கள்
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை அம்பன்பொல - வெரஹெரயாம என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 24 வயதுடைய ரொஷான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டடைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த அம்பன்பொல பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலம் இருந்தபோது, பிரதான சோதனைச் சாவடியாக இருந்த ஓமந்தையில் இன்று நண்பகல் முதல் சோதனை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓமந்தை சோதனைச் சாவடியில் பொதுமக்களுக்கு பிரயாணத்தின்போது, சிரமங்களைக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பரிசோதனை நடவடிக்கைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில், வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் முக்கிய பிரயாணப் பாதையாக விளங்கிய ஓமந்தையில், பயணிகளின் பிரயாணப் பொதிகள் சோதனையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், வடக்கிலிருந்து தெற்கிற்கு எடுத்துச் செல்லப்படும் விளையாட்டுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பன சந்தேகத்திற்கு உரியதாக இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். ஆனால் பழைய இரும்புப் பொருட்கள், கழிவு இரும்புகள் என்பவற்றைச் சோதனையிடுவது நிறுத்தப்படவில்லை. இந்தத் தளர்வு நடவடிக்கையையடுத்து, ஓமந்தை சோதனைச் சாவடி படிப்படியாக அகற்றப்படும் என வன்னிக் கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா மேலும் குறிப்பிட்டார்
Posted by NIsha | |
Posted in
worldNews

வளைகுடா நாடுகளில் பற்றி எரிந்த "ஜனநாயக தீ' , மத்திய தரைக்கடல் நாடான சிரியாவில் பல மாதங்களாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர், சர்வாதிகார கரம் கொண்டு இந்த தீயை அணைக்க பார்க்கிறார். அந்நாட்டு ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.
சிரியா பழமையான வரலாறு கொண்ட நாடு. கி.மு., 3000ம் ஆண்டு முதல் எகிப்தியர், சுமேரியர், ஆரியர், பாபிலோனியர், பாரசீகர் என பலர் ஆட்சி செய்துள்ளனர். கி.பி., 640ம் ஆண்டு முகலாயர்கள் கைப்பற்றினர். பின் பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசையில் சிரியா சிக்கியது. 1946ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் சுதந்திரம் அளித்தனர். 1961ம் ஆண்டு வரை எகிப்தின் ஒரு பகுதியாகவே சிரியா விளங்கியது. 1961 செப்.28ல் தனி நாடாக மலர்ந்தது. 1970ம் ஆண்டு முதல் "பாத்' எனும் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சிரியா ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டது. இதனால் ஒரே குடும்பத்தின் ஆட்சியே நடந்து வருகிறது. 1970-2000 வரை ஹபிஸ் அல் அசாத் என்பவர் ஆட்சி செய்தார். அவருக்கு பின் அவரது மகன் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு, ஜனநாயகத்துக்காக போராடிய அனைத்து குழுக்களும் முடக்கப்பட்டன.
2011ம் ஆண்டு சில அரேபிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி புரிந்த அதிபர்களுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இப்புரட்சி துனீசியா, லிபியா போன்ற நாடுகளில் ஜனநாயகம் தழைக்க வழி செய்தது. இதன் காரணமாக ஜனநாயகத்தை விரும்பிய சிரியா நாட்டு போராட்ட குழுக்களும், புரட்சியில் குதித்தன. 2011ம் ஆண்டு உள்நாட்டுப்போர் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதிபர் அசாத்தும், அவரது ஆட்சிக் குழுவினரும் "அலாவைட்' எனும் பிரிவை சார்ந்தவர்கள். சிரியாவில் இப்பிரிவினர் 10 சதவீதம் மட்டுமே. 75 சதவீதம் பேர் வேறு பிரிவை சேர்ந்தவர்கள். உள்நாட்டுப் போருக்கு இதுவும் ஒரு காரணம்.
உள்நாட்டு போரில் அதிபரின் ராணுவம், மனிதத் தன்மையை மறந்து செயல்படுகிறது. உலக நாடுகள் சிரியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பில் இருந்தும் சிரியா வெளியேற்றப்பட்டது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலும் பலமுறை எச்சரித்தாகிவிட்டது. எதையும் சிரியா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரஷ்யாவும், சீனாவும் மட்டுமே சிரியாவுக்கு ஆதரவளித்து வருகின்றன. சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில், எந்த நாடும் தலையிடக் கூடாது என தெரிவிக்கின்றன. இப்போரினால் அண்டை நாடுகளான ஈராக், ஜோர்டான், துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளிலும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கும், இந்தப்போரில் பங்கிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ரசாயன குண்டு தாக்குதல்:
எந்த போரிலும் ரசாயன குண்டுகள் பயன்படுத்தக் கூடாது என்பது, பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் விதிமுறை. இது மனித சமுதாயத்திற்கு எதிரான கொடூரமான செயல் என்பதாலேயே இந்த ஏற்பாடு. ஆனால் இதையும் மீறி, சமீபத்தில் சிரிய ராணுவத்தினர் நடத்திய ரசாயன குண்டு வெடிப்பு தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள அயர்ன் டர்மா, சமால்கர், ஜோபர் ஆகிய பகுதிகளில் ஆக.21ல், அதிகாலை 3 மணி அளவில் இந்த கொடூர ரசாயன குண்டு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நுரையீரலுக்குள் நச்சுப் பொருட்கள் பரவி, நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்ததால், சம்பவ இடத்திலேயே கொத்துகொத்தாக, பலர் துடிதுடித்து பலியாயினர்.
கண்டனம்:
இச்சம்பவத்திற்கு ஐ.நா.,வும், பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் சிரியா, பழியை புரட்சியாளர்களின் மீது சுமத்தியது. தாக்குதல் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஆனால் சம்பவ இடத்தில், ஆய்வு மேற்கொள்ள அனுமதி தர முடியாது எனவும் சிரியா தரப்பில் கூறப்பட்டது. ராசாயன தாக்குதல் குறித்து, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் கலந்து பேசினார் அமெரிக்க அதிபர் ஒபாமா. முடிவில், ராணுவ நடவடிக்கை மூலம், சிரிய ராணுவத்திற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அமெரிக்க விமானம் தாங்கிய போர்க்கப்பல்கள், சிரியா நோக்கி சென்றுள்ளன. அப்பாவி மக்கள் மீது, ராசாயன குண்டு மூலம் தாக்குதல் நடத்திய, சிரியா மீது கரிசனப்பார்வை கூடாது. ராணுவ தாக்குதல் தொடுத்தாக வேண்டும் என பல உலக நாடுகள் கங்கணம் கட்டியுள்ளன. ஐ.நா.,வின் அனுமதி தேவையில்லை எனவும் அறிவித்துள்ளன.
கலவரம் நடக்க காரணம்:சிரியாவில், அதிபர் பஷர் அல்-அசாத் குடும்பம், 35 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டு வருகிறது. ஆட்சியை விட்டு அதிபர் விலக, மக்கள் பொறுமை காத்தனர். அது நடக்காத காரணத்தால், அதிபர் பதவி விலகக் கோரி கிளர்ச்சியாளர்களுடன் பொதுமக்களும் இணைந்து போராட்டத்தை துவக்கினர். உள்நாட்டு போருக்கு இதுவே முக்கிய காரணம்.
ஆதரவு நாடு:சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக, சிரியா, ரசாயன குண்டு பயன்படுத்துவதாக கூறி, அமெரிக்கா அந்நாட்டு உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது. அவ்வாறு தலையிட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என, ரஷ்யா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது.
பாதிப்புகள் என்னசிரியா தாக்கப்பட்டால், அந்நாடு மட்டுமல்லாது, இந்தியா உட்பட பல நாடுகளும் மறைமுகமாக பாதிக்கப்படும்.
* உலக அளவில் பொருளாதாரம் சீரழியும்
* கச்சா எண்ணெய் விலை உயரும்
* கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும்
* கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா போன்ற நாடுகள் பெட்ரோல் இறக்குமதிக்கு அதிகம் செலவழிக்க நேரிடும்.
* இறக்குமதி அதிகரித்து, இந்திய ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும்
* இந்தியாவில் விலைவாசி உயரும்
* அமெரிக்க ஆதரவு, ரஷ்ய ஆதரவு என உலக நாடுகளிடையே மீண்டும் பிளவு ஏற்படும்.
Posted by NIsha | |
Posted in
worldNews

பாரிஸ்: சிரியா நாட்டின் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்கு ஆதரவளிக்க, பிரான்ஸ் முன் வந்துள்ளது. சிரியா நாட்டில், அதிபர் பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும் படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும் படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத சப்ளை செய்து வருகின்றன. இதனால், சிரியாவில், தொடர்ந்து, சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். ரசாயன ஆயுதம் : சிரியா நாட்டுக்கு, ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகள், ஆதரவளித்து வருகின்றன. சிரியா ராணுவத்துக்கு, ரஷ்யா, நவீன ஆயுதங்களை வினியோகம் செய்து வருகிறது. இதனால், சிரியாவுக்கு எதிராக, ஐ.நா., பாதுகாப்பு சபையில் ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வர இயலவில்லை. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை ரசாயன குண்டு பயன்படுத்தியதற்கான தடயம் கிடைக்கவில்லை. சர்வதேச விதிகளை மீறி ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக, மற்ற நாடுகளின் ஆதரவை, ஒபாமா திரட்டி வருகிறார். பிரிட்டன் ஆதரவில்லை : சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரினார். எம்.பி.,க்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால், இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தது. பிரிட்டன் பிரதமர் கொண்டு வந்த தீர்மானம், 13 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து, பார்லிமென்ட்டை மீறி, அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக, பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். பிரான்ஸ் ஆதரவு : "சிரியா விஷயத்தில், பிரிட்டனின் ஆதரவு கிடைக்கா விட்டாலும், அமெரிக்காவின் முயற்சிக்கு, பிரான்ஸ் பக்கபலமாக இருக்கும்,'' என, பிரான்ஸ் அதிபர் ஹோலன்ட் உறுதியளித்துள்ளார். இதே போல, சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல் நாடும் ஆதரவு தெரிவித்துள்ளது. சிரியாவின் நட்பு நாடு என்ற முறையில், ரஷ்யா, தன் பங்குக்கு, நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களையும், ஏவுகணை தாங்கிய கப்பல்களையும், அனுப்ப திட்டமிட்டுள்ளது
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

28 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரையான யாழ்.தேவி ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது. இதற்கு முன்னோடியாக ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரை இரு தடவைகள் பரீட்சார்த்த ரயில் சேவை வெற்றிகரமாக இடம்பெற்றன. ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான 62 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை இந்திய இர்கொன் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படஉள்ளது. 1989 ஜனவரி 19ம் திகதி கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் வைத்து வடபகுதி ரயில் பாதை புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 28 வருடங்களாக வடபகுதி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. வடக்கு மீட்கப்பட்ட பின் மதவாச்சியில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதை மீளமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வருட நடுப்பகுதியில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளதோடு தற்பொழுது ஓமந்தை வரை ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன. மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் வடபகுதிக்கான ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Posted by NIsha | |
Posted in

வடகொரியாவில் ஆபாச நடனமாடி, அதனை சிடிக்களாக விற்பனை செய்த பாப் பாடகி மற்றும் அவரது குழுவில் இடம்பெற்ற 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உன்னாஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவை நடத்தி வரும் ஹயான் சாங்-வோல் என்பவர், ஆபாசமாக நடனமாடி அதை வீடியோ படம் எடுத்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளார். இது வடகொரிய நாட்டு சட்டப்படி குற்றமாகும். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஹையான் சாங் -வோல் உட்பட இசைக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இயந்திர துப்பாக்கியால் சுட்டு அவர்கள் 12 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்த ஹையான் சாங்- வோல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by NIsha | |
Posted in
MaruttuvaKurippukal
நீரிழிவு நோயின் அறிகுறிகள் பற்றி பலரும் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது
• எனக்குப் புண்கள் விரைவாக ஆறிவிடுகின்றது
• எனக்குத் தண்ணீர் விடாய் இல்லை.
• எனக்கு அடிக்கடி சிறுநீர் போவதில்லை.
• எனக்குத் தலைச்சுற்றுக் கிடையாது
• எனக்கு களைப்புக் கிடையாது
எனவே எனக்கு நீரிழிவு இருக்காது எனப் பலரும் தாமாகவே முடிவு கட்டுகின்றனர்.
இது தவறான கருத்தாகும். நீரிழிவின் ஆரம்ப நிலையில் பெரும்பாலனவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. ஆனால் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கிடையிலேயே இருதயம், இரத்தக் குழாய்கள், நரம்புகள், மூளை போன்றவற்றில் தாக்கங்கள் ஆரம்பித்து விடுகின்றன. இவற்றினால்தான் பிற்காலத்தில் பக்கவாதம், மாரடைப்பு, கால் விறைப்பு, சிறுநீரகம் பழுதடைதல், மாறாத கால் புண்கள், கால்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றல் போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மறைந்திருக்கும் நோய்
இந் நோயின் மிக ஆபத்தான அம்சம் என்னவெனில் மிகப் பெருந்தொகையான மக்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்பதுதான். சுமார் 50 சதவிகிதமானவர்கள் தமக்கு நீரிழிவு இருப்பதை அறியால் இருக்கிறார்கள் எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. மிகத் தாமதமாக, அதுவும் தமக்கு அந் நோயின் பின் விளைவுகள் வந்த பின்னரே பெரும்பாலானவர்கள் தம்நோயைக் கண்டறிகின்றனர். இதற்குக் காரணம் நீரிழிவு நோய் பற்றிய மேற் கூறிய தவறான எண்ணங்களே.
எனவே அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் வரை காத்திருப்பது மூடத்தனமானதாகும்.
• இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலமே நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். பலவிதமான இரத்தப் பரிசோதனைகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையுடன் தமக்கேற்றதைச் செய்து கொள்ளலாம்.
• சிறுநீர்ப் பரிசோதனை செய்வது இந்நோயைக் கண்டறிவதற்கான நம்பிக்கையான முறையல்ல என்பதால் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்
மருத்துவர்கள் வேறு நோய்களுக்காக அவரிடம் செல்லும் போதும் பிரஸரை அளந்து பார்க்கிறார்கள். அதே போல தமக்கு சந்தேகம் உள்ள பலரையும் சீனிக்கான இரத்தப் பரிசோதனை செய்யும்படி வேண்டுகின்றனர். இவ்வாறு இரத்தத்தில் சீனிப் பரிசோதனை செய்வது பல காரணங்களுக்காக இருக்கக் கூடும்.
மருத்துவரிடம் செல்லாதபோதும், உங்கள் இரத்தத்தில் சீனியின் அளவு சரியாக இருக்கிறதா, அதிகரித்திருகிறதா என அறியப் பரிசோதனை செய்ய வேண்டும் முக்கியமான கீழ்க் கண்டுள்ளவர்கள் குருதியில் தமது சீனியின் அளவைச் செய்தறிவது அவசியமாகும்.
• பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
• கொழுத்த உடல்வாகு உள்ளவர்களும் கட்டாயம் செய்ய வேண்டும். எடையானது உயரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதை உடற் திணிவு அலகு குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் Body Mass index (BMI) ஆகும். இது இலங்கை போன்ற தெற்காசிய நாட்டவர்களுக்கு 23ற்குள் இருக்க வேண்டும். 25 மேற்பட்டவர்கள் செய்து கொள்வது விரும்பத்தக்கது.
• தொந்தியான வயிறுள்ளவர்களும் செய்ய வேண்டும்.
• தமது குடும்பதில் நீரிழிவு உள்ளவர்கள். பெற்றோர், சகோதரர்கள் போன்றவரிடையே நீரிழிவு உள்ளவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியம் அதிகம். எனவே அவர்களுக்கும் அவசியமாகும்.
• உடல் உழைப்பற்ற, வாழ்க்கை முறையுள்ளவர்கள்
உலகளாவிய ரீதியில் பாதிப்பு அதிகமுள்ள நோய்
இன்றைய கால கட்டத்தில் நீரிழிவு நோயின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது மாத்திரமின்றி வேகமாக அதிகரித்தும் வருகிறது. உலகளாவிய ரீதியில் 350 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கபட்டிருக்கின்றனர்.
இந்நோயின் பாதிப்பால் மரணத்துக்கு ஆளாபவர்கள் தொகை பயமுறுத்துவதாக இருக்கிறது. 2004 ம் ஆண்டு கிடைத்த தகவல்களின் பிரகாரம் சுமார் 3.5 மில்லியன் மக்கள் இந்நோயின் தாக்கத்தால் மரணத்தைத் தழுவினர். 8 வருடங்கள் கழிந்த நிலையில் இன்று அது இரு மடங்காக அதிகரித்து இருக்கலாம்.
இலங்கையில் இருபது வயதிற்கு மேற்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் பத்து சதவிகிதத்தினர் (10.3%) இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நகர்ப்புற மக்கள், கிராமப் புற மக்கள் என வேறுபாடின்றி அனைவரையும் பாதித்து வருகின்ற போதும் நகர்பபுறத்தில்
16.4% சதவிகிதமாக இருக்கின்ற அதே நேரம் கிராமப்புறங்களில்
8.7% சதவிகதமாக இருக்கிறது. நகரப்புற மக்களில் சற்று அதிகமாக இருப்பற்குக் காரணம்; அவர்களது வாழ்க்கை முறைகள்தான்.
நீரிழிவு ஏன் அதிகமானவர்களைப் பாதிக்கிறது
• போதிய உடலுழைப்பில் ஈடுபட முடியாமல் இருப்பதும்
• தவறான உணவு முறைகளும்
• கடைகளில் விற்கும் திடீர் உணவுகளை (குயளவ குழழனள) அதிகளில் உண்பதும் முக்கிய காரணங்களாகும்.
எண்ணெயில் பொரித்ததும், அதிகளவு மாச்சத்து, இனிப்புச் சத்து, உப்பு ஆகியன கொண்ட அத்தகைய குப்பை உணவுகளாவன
• நீரிழிவு நோயை மட்டுமின்றி கொலஸ்டரோல்,
• பிரஷர்,
• பக்கவாதம்,
• மாரடைப்பு போன்ற இருதய நோய்கள்,
• சிறுநீரக செயலிழப்பு,
• புற்றுநோய்
போன்ற பலவற்றையும் கொண்டு வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
இன்று கிராமப் புற மக்களின் உணவு முறைகளிலும் இத்தகைய தவறான உணவுப் பழக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்களிலும் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் அதிகரி;கிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை யாவரும் கடைப்பிடிப்பது அவசியம்.
நீரிழிவாளரின் உணவு
நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்? இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான உணவுத் திட்டம் என எதுவுமே கிடையாது எனச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படவீர்கள். ஆனால் அதுதான் உண்மை.
காலாவதியான கருத்து
‘நீரிழிவாளர்கள் சீனி சேர்க்கக் கூடாது. சோறைத் தவிர்க்க வேண்டும். அரிசி கோதுமை ஆகிய மாப் பொருள்களால் செய்யப்படும் இடியப்பம், பிட்டு, இப்பம், நாடில்ஸ் போன்ற சிற்றுண்டிகளை குறைந்தளவே உண்ண வேண்டும்’ என்பதே பெரும்பாலான நோயாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
பல மருந்துவர்களும் இதையே நோயாளர்களுக்கு ஆலோசனையாகக் கூறுகிறார்கள்.
தற்போதைய கருத்து
இப்பொழுது உலகளாவிய ரீதியில் மருத்துவர்களாலும், உலக சுகாதார ஸ்தாபனம் போன்றவற்றாலும் சிபார்சு செய்யப்படும் உணவுமுறை என்ன சொல்கிறது?
• கொழுப்பு, சீனி, உப்பு ஆகியன குறைந்தளவும்.
• பழங்களும் காய்கறிகளும் அதிகம் கொண்டதுமான
• ஆரோக்கியமான சமவலுவுள்ள (டியடயnஉநன)உணவையே ஆகும்.
• எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
எதையும் முற்றாகத் தவிர்க்கச் சொல்லவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
கொழுப்பு என்றால் என்ன? எண்ணெய், பட்டர், மார்ஜரின் போன்ற அனைத்துக் பொருள்களும், அவை சார்ந்த உணவுகளாகும். சீனி கூடத் தவிர்க்கப்படவேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆனால் அவற்றை உணர்வுபூர்வமாக அணுகாது, புத்திபூர்வமாக அளவோடு உணவில் சேர்க்கலாம்.
பொதுவான ஏனைய ஆலோசனைகள் என்ன?
• உணவில் மாப்பொருள் உணவு பெரும்பகுதியாக இருக்க வேண்டும். மாப்பொருள் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கிளைசீமிக் இன்டெக்ஸ் (டுழற புஐ) குறைவான உணவுகள் முக்கிய இடம் பெறுவது நல்லது. கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது குறிப்பிட்டளவு ஒரு உணவை தனியாக உண்ணும்போது சீனியின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை பற்றிய ஒரு கணக்கீடு ஆகும்.
• கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமுள்ள உணவுவகைளைத் தவிர்க்கவும். அதிலும் முக்கியமாக பிரதான உணவுகளுக்கு இடையேயான குறுந்தினிகளுக்கு தவிர்ப்து நல்லது. அவற்றிற்குப் பதிலாக ஒரு பழம் சாப்பிடலாமே.
• காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம்.
• உணவுகளை வேளைக்கு வேளை சாப்பிட வேண்டும். உணவுகளைத் தப்ப விடுவது கூடாது. விரதம் இருப்பது கூடாது.
• எண்ணெய், நெய், பட்டர், மார்ஜரின் போன்றவற்றை உண்பதில் அவதானம் தேவை. ஹைரஸன் ஏற்றப்பட்ட மார்ஜரின் வகைகள் கூடாது. ஒலிவ் ஓயில், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், நல்லெண்ணய் போன்றவை நல்லது, ஆயினும் தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய் தவிர்க்பட்ட வேண்டியது அல்ல. அளவோடு உண்ணலாம்.
• ஒரு முறை பொரித்த எண்ணெயை வீசிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே எண்ணெயை உபயேபகிக்கக் கூடாது.
• பால் அருந்தும்போது கொழுப்பு குறைந்த அளவுள்ள பாலைத் தேர்ந்தெடுங்கள். யோகர்ட் போன்றவற்றை உண்ணும்போதும் அவ்வாறே குறைந்த கொழுப்புள்ளதையே தேர்ந்தெடுக்கவும்.
• பொரித்த, பேக் பண்ணப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
• துரித உணவுகளைத் (Fast food) தவிருங்கள். கட்லட், ரோல்ஸ், பிட்ஸா, சமோசா, ஹம்பேகர், பிரன்ஸ் ப்ரை, பிஸ்கற், வடை, சூசியம், சொக்லற் கேக், வனிலா கேக் போன்ற பலவும் அடங்கும்.
• இறைச்சியைத் தேர்ந்தெடுக்கும்போது கொழுப்பு குறைந்தவற்றையே உண்ணுங்கள். ஆடு, மாடு, பன்றி போன்றவற்றிக்கு பதிலாக கோழி உண்ணலாம். அதிலும் கொழுப்புள்ள பகுதியை நீக்குங்கள்.
• மதுபானம் அதிகம் கூடாது. இனிப்புள்ள மென் பானங்கள் கூடாது. ஆனால் போதிய நீராகாரம் எடுங்கள்.
Posted by NIsha | |
Posted in
beauty

அழகான, ஆரோக்கியமான கூந்தலை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதற்காக எத்தனையோவிதமான குறிப்புகளை படித்து அதை தொடர்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் முடி உதிர்வுப் பிரச்சினை அவர்களை கவலையில் மூழ்கடித்து விடும். ஆரோக்கியமான கூந்தலுக்கு சத்தான உணவுகளை உண்ணவேண்டும். உடலில் இரும்புச்சத்து, கால்சியம்சத்து, புரதச்சத்து குறைபாடு இருந்தாலே கூந்தல் உதிர்வு பிரச்சினை ஏற்படும். எனவே ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்பவர்கள் உண்ண வேண்டிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளனர். பருப்பு, பயறு வகை உணவுகள் பருப்பு, பயறு வகை உணவுகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது உடலின் ஜீரணசக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய், நீரிழிவு, உடல்பருமன் போன்றவைகளை தடுக்கும் இந்த சூப்பர் உணவுகள் ஆரோக்கியமான கூந்தலின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. வைட்டமின் சி வைட்டமின் சி உணவுகளில் கொலோஜன், புரதம் கூந்தலின் வேர் கால்களை வலுவூட்டுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெர்ரீஸ், கொய்யா போன்ற பழங்களில் சிறப்பான வைட்டமின் சி ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தினை கிரகித்துக்கொள்ளும், இதனால் கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமாக அதிகரிக்கும். ப்ரௌன் அரிசி ப்ரௌன் அரிசியில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது கூந்தலின் பளபளப்பிற்கு அதிகம் உதவிபுரிகிறது. மேலும் ப்ரௌன் அரிசியில் உயர்தர வைட்டமின்களும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. இது கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்றது. பருப்பு தால் உண்ணும் உணவில் துவரம்பருப்பு தால், பாசிப்பருப்பு தால் சேர்த்துக்கொள்வது நல்லது. இதில் அதிக அளவு புரதமும். பொட்டாசியம், மங்னீசியம், போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்றது. கால்சியம் உணவுகள் உடம்பில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூந்தல் உதிர்வு பிரச்சினை ஏற்படும். எனவே பால், பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகளின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதோடு பளபளப்பான கூந்தலும் கிடைக்கும். எனவே கூந்தல் உதிர்கிறதே என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சத்தான உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
Posted by NIsha | |
Posted in
samayal Kuripu
தேவையான பொருட்கள்: காலிப்பிளவர் - 1
பாசிப்பருப்பு - 200
கிராம் வெங்காயம் – 250
கிராம் தக்காளி – 250
கிராம் பச்சை மிளகாய் – 10
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க: வரமிளகாய் - 5
பட்டை, இலை,
மிளகு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
கறிவேப்பிலை,கொத்தமல்லி
ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும். பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்) சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்) காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு, சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார்.
Posted by NIsha | |
Posted in
Sports News

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசன் மற்றும் அவருடைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இரு நபர் குழு, சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து பிசிசிஐயும், புதிய விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட மறுத்த மும்பை உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பிகார் கிரிக்கெட் சங்கமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
Posted by NIsha | |
Posted in
worldNews

சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார். சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசும்போது ஜான் கெர்ரி இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமெரிக்கா இறுதியில் என்ன முடிவை எடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்பதே ஒபாமாவின் கொள்கையாக இருப்பதாக ராணுவச் செயலர் சக் ஹேகல் தெரிவித்திருக்கிறார். சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் தோற்றுப்போன செயலானது, உலக அரங்கில் தொடர்ந்தும் பிரிட்டன் முக்கிய பங்களிப்பை ஆற்ற விரும்புகிறதா என்கிற விவாதத்தை தோற்றுவித்திருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்திருக்கிறார்.
Posted by NIsha | |
Posted in
worldNews
கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மத்திய நைரோபியில் உள்ள தேசிய காவல் சேவை ஆணைய அலுவலகத்தின் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடந்தது.
Posted by NIsha | |
Posted in
விந்தை உலகம்

தனது காதலனின் ஆண் உறுப்பை கத்திரிக்கோலால் வெட்டி ஆற்றில் வீசிய பெண் பொலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதார். தாய்வான் நாட்டைச்சேர்த 30 வயது பெண்தான் பான். சில நாட்களுக்கு முன்னர் அவர் மீது ஒருவர் காதல் கொண்டார். இவரின் பெயர் 29வயதான வென்ங். இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விவாகரத்துப்பெற்ற பின்னர் பான் உடன் நட்புடன் பழக தொடங்கியிருக்கிறார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இருவருக்கும்ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. காலம் செல்ல செல்ல வென்ங்கின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. போதைப்பொருள் பாவனை குடி சண்டை என இவரது பழக்க வழக்கங்கள் ஆபத்தான பாதைக்கு சென்றது. இதனால் இவர் அடிக்கடி வேலைக்கும் போகாமல் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார். இந்த நிலை தொடரவே பான் ஒரு முடிவு செய்தாள். ஒருநாள் படுக்கைக்கு போகும் போது தனது கணவருக்கு தூக்க மாத்திரகளை கொடுத்து தூங்கும் வரை காத்திருந்தாள். வென்ங் உறக்கத்தில் ஆழ்ந்த சந்தர்ப்பம் பார்த்து கத்திரக்கோல் ஒன்றின் மூலம் ஆணுறுப்பை துண்டித்தார். அதை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆற்றில் கொண்டு வீசினார். வீட்டில் வலி தாக்காத கதறியழுத வென்ங் கின் சந்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் அவசர பொலீசுக்கு தகவல் வழங்கினார்கள்.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் அவர் மயக்க மடைந்து உயிருடன் இருப்பதை பார்த்தனர். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னரே இவரது மனைவி பொலீசரிடம் சரணடைத்து மேற்படி வாக்குமூலத்தை அளித்துள்ளார். தனது கணவர் இனிமேல் எந்த பெண்ணுடனும் சண்டையிடக்கூடாது என்றே இதைச்செய்ததாக குறிப்பிட்டார். இதன் பின்னர் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Posted by NIsha | Friday, August 30, 2013 |
Posted in
விந்தை உலகம்
இங்கிலாந்தில் 16 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஆசிரியை ரோசன்னா லாங்க்லி. இவர் தனது வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறித்த மாணவனிடம் ஆசையாக பேசியும், தனது நிர்வாண புகைப்படங்களை எஸ்எம்எஸ், எம்எம்எஸ்-ஸாக அனுப்பியும் தனது வலையில் சிக்கவைத்துள்ளார். மேலும் அந்த மாணவனின் பெயரையும் தனது மார்பில் பச்சை குத்தி வைத்துள்ளார். அத்துடன் வார இறுதி நாட்களில் லண்டனுக்கு வெளியே கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

தமிழ்நாடு, கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், சென்னையில், கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி. முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இவர்கள் இருவரும், இலங்கையின் முக்கிய பகுதிகளில் குண்டு வைக்க திட்டமிட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த, முன் சோதனை செய்வதற்காக, தமிழகத்திற்கு தப்பி வந்தனர். இவர்கள், கடலூர் மாவட்டத்தின் முந்திரிக் காட்டில், மேலும் நால்வருடன் சேர்ந்து, சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனையிட்ட போது, உடன் இருந்த, நால்வரும் பிடிபட்டனர். சிவனேசன், கோபி இருவரும் தப்பிவிட்டனர். இவர்களை, பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் சிவனேசனும், கோபியும் சுற்றித் திரியும் தகவல் கிடைத்தது. அவர்கள் இருவரையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Posted by NIsha | |
Posted in
India tamil news
எனது வாழ்நாளில் 1,00,000 ஆண்களுடனாவது உறவு கொள்ளவேண்டும்’ போலாந்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது வாழ்நாளில் 1,00,000 ஆண்களுடனாவது உறவு வைத்துக்கொள்ளவேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார். போலந்து தலைநகர் வார்சாவை சேர்ந்த 21 வயது பெண் அனியா லிசவுஸ்கா. மக்கள் அனைவருக்கும் வாழ்நாள் லட்சியமாக இருக்கும் சில விஷயங்களை போல அனியாவிற்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள 1,00,000 ஆண்களுடனாவது உடல் உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே இவரது லட்சியம்.இது குறித்து தெரிவித்துள்ள அனியா, எனக்கு செக்ஸ் மற்றும் ஆண்கள் மீது நாட்டம் அதிகம், உலகெங்கிலும் வாழும் ஆண்களுடன் நான் உறவு வைத்துகொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். வார்சா என்னும் பகுதியில் கடந்த மாதம் தொடங்கிய இவரது பயணத்தில், அனியா இதுவரை இதுவரை 284 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by NIsha | |
Posted in
India tamil news

போபாலில் தனது மகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட டியூஷன் ஆசிரியரின் முகத்தில் கரி பூசி, செருப்பு மாலை அணிவித்து தாய் ஒருவர் அவமானப்படுத்தியிருக்கிறார். ஷுஜால்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனியார் டியூஷன் ஒன்றில் பயின்றுவந்தார். அப்போது அவருக்கு வகுப்பெடுக்கும் நரேந்திரா ஷர்மா என்னும் நபர் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார். மேலும் தான் இவ்வாறு நடந்துக்கொள்வதை பெற்றோரிடம் கூறினால் பல சிக்கல்களை சந்திக்கவேண்டியிருக்கும் என அந்த சிறுமியை மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் பொருமை இழந்த அச்சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆவேசமடைந்த சிறுமியின் தாயும், அவரது உறவினரும் பிரேம் நகரில் உள்ள டியூஷன் நிலையத்திற்கு வந்து நரேந்திரா ஷர்மா அடித்து உதைத்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் தடுத்தபோதும், நரேந்திராவை தொடர்ந்து தாக்கிய அப்பெண்கள் அவரது முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து அவரை அவமானப்படுத்தினார்கள். இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் உடனடியாக போலீசில் தகவல் அளிக்க, அங்கு விரைந்த போலீசார் நரேந்திரா ஷர்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news

மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து ரவுசு பேட்டி கொடுத்துள்ளாராம். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும், தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்கு பணிபுரியும் தமிழக பொலிசார் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். டெல்லியில் 1500 ரகிகர்கள் என்னை வந்து சந்தித்தனர். அவர்கள் எல்லாம் என் ரசிகர்கள். நான் சிறை சென்ற காலத்தில் கொலிவுட் என்னை மிஸ் பண்ணி இருக்கும். என் படமான ஆனந்த தொல்லை தீபாவளிக்கு வெளியாகும். நான் சிறைக்கு சென்றது சிலர் செய்த சதி. இந்த பிரச்சனைகளில் இருந்து நிச்சயம் மீண்டும் வருவேன் என்று பேட்டி கொடுத்துள்ளாராம்.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news
அரசியல் புள்ளியுடன் காதல், திருமணம், அமெரிக்காவில் செட்டில் போன்ற செய்திகளுக்கு இன்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலிக்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மருமகனுக்கும் ரகசிய திருமணம் என்றும், இருவரும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தான் நடித்த மதகஜராஜா படத்தின் தெலுங்கு டப்பிங்குக்குக் கூட அவர் வர மறுப்பதாகவும் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான விஷாலே வருத்தப்பட்டிருந்தார். இப்போது இந்த செய்திகளுக்கு விளக்கம் தெரிவித்துள்ளார் அஞ்சலி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: “கற்றது தமிழ் தொடங்கி இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் எனக்கு ஊக்கமளித்து ஆதரித்த அனைத்து ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் நான் நடித்த மதகஜராஜா படத்துக்கு டப்பிங் பேச மறுத்ததாகவும், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்தும் முற்றிலும் தவறானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news
மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமான படம், ‘இரவும் பகலும்.’ பல வருடங்களுக்குப்பின், இதே பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில் திருடனாகவும் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலும், எதிர்பாராத சம்பவங்களுமே இந்த படத்தின் கதை. மகேஷ்–அனன்யா கதாநாயகன்–கதாநாயகியாக நடிக்கிறார்கள். ஜெகன், ஏ.வெங்கடேஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். தீனா இசையமைக்கிறார். பாலா ஸ்ரீராம் டைரக்டு செய்கிறார். ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் பெரியசாமி இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் பாலா ஸ்ரீராம் கூறியதாவது:– ‘நடுத்தர வர்க்கத்து குடும்ப பாசம் மற்றும் நகைச்சுவையுடன் புதுமையான காதல் படமாக இது தயாராகிறது. கதை சொல்லும் பாணியில் புதிய முயற்சியை கையாண்டிருக்கிறோம். அனன்யா கதை கேட்டதும் மிகவும் பிடித்துபோய் ஒரே ஒரு ரூபாய் மட்டும் முன்பணம் பெற்றுக்கொண்டு நடிக்க வந்தார். இந்த படமும், கதாபாத்திரமும் தன் சினிமா பயணத்தில் தனி இடத்தை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் மகேஷ் நடித்தார்.’
Posted by NIsha | |
Posted in
விந்தை உலகம்

மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி(8) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறாள். கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா சர்வீஸ் செய்வதை உன்னிப்பாக பார்த்தாள். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் அவருக்கு தொடர்ந்து 15 நாட்கள் கணினியை கழற்றி மாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார். அதன் பின்பு கடையில் இருந்த மடிக்கணினியை சிறுமி தானே கழற்றி மாட்டி அசத்தினாள். மாணவியின் திறமையை கண்டு பள்ளி ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் அரியானா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு ஆதர்ஷினி பெயரை பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன பொறுப்பாளர் விவேக்ராஜா, சிறுமியின் தாத்தாவும் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியருமான மகாலிங்கம் ,பள்ளி சேர்மன் அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 18.47 நிமிடத்தில் ஒரு மடிக்கணினியை கழற்றி மாற்றினாள் ஆதர்ஷினி. அதைவிட குறைவான நேரத்தில் சிறுமியால் இதனை செய்ய முடியும் என்ற அவளது தன்னம்பிக்கையை பாராட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது சாதனை நிறுவனம். இதனை தொடர்ந்து 15.23 நிமிடத்தில் மடிக்கணியை கழற்றி மாட்டி சாதனை படைத்ததன் மூலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ஆதர்ஷினி இடம் பிடித்தாள். இது குறித்து சிறுமி கூறுகையில், கணினியை அப்பா சர்வீஸ் செய்வதை பார்த்து எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. 15 நாட்கள் இடைவிடாது முயற்சி செய்து அதன் நுட்பத்தை தெரிந்து கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளேன். தற்போது செய்த சாதனையை காட்டிலும் மிக குறைவான நேரத்தில் செய்து மற்றொரு சாதனை படைப்பேன் என கூறினார்.
Posted by NIsha | |
Posted in
விந்தை உலகம்
பிரிட்டனில் 72 மணி நேரம் தொடர்ந்து பணியாற்றிய பல்கலைக்கழக மாணவர் மன இறுக்கத்தால் உயிரிழந்தார். பிரிட்டனை சேர்ந்தவர் மோரிட்ஜ், 21. இவர், அமெரிக்காவின், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். படிப்பின் ஒரு பகுதியாக, அனுபவ ரீதியான கல்வி அறிவு பெறுவதற்காக, அங்குள்ள பல்வேறு வங்கிகளுக்கும், பல்கலைக்கழக மாணவர்கள் பணியாற்ற அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வகையில், மோரிட்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், லண்டனில் உள்ள, "பேங்க் ஆப் அமெரிக்கா´வில் பணியாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, மோரிட்ஜ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து, மூன்று நாட்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டும் என, மோரிட்ஜுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் தண்டனை அறிவிக்கப்பட்டது. பல்கலையின் ஆணையை பின்பற்றாமல் போனால், பட்டம் கிடைக்காது என்ற பயத்தில், மோரிட்ஜ் தொடர்ந்து, மூன்று நாட்கள் பணியாற்றினார். இரவு, பகல் பாராமல் தொடர்ந்து வேலை பார்த்ததால், மோரிட்ஜ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மூன்று நாட்களுக்குப் பின், மோரிட்ஜ் தன் நண்பர்களுடன் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று ஓய்வெடுத்தார். அன்று காலை, சக நண்பர்கள் அலுவலகம் சென்று, மாலை வீடு திரும்பினர். அப்போது வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால், அதிர்ச்சி அடைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, குளியல் அறையில் மோரிட்ஜ் பிணமாகக் கிடந்தார். அங்கு வந்த பொலிசார், மோரிட்ஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, மோரிட்ஜுடன் தங்கியிருந்த நண்பர்கள் கூறுகையில், "மோரிட்ஜ் செய்த சிறு தவறை பயன்படுத்தி, பல்கலைக்கழக நிர்வாகமும், வங்கி அதிகாரிகளும், அவரை கொடுமைப்படுத்தி விட்டனர். தொடர்ந்து உழைத்ததால் மன இறுக்கம் ஏற்பட்டு, இதயம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார்´ என்றனர்.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news

மும்பையில் கடந்த வாரம் 22 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதன்மூலம் டெல்லியைப் போன்று மும்பையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், மும்பை புறநகரில் தொலைக்காட்சி நடிகை ஒருவரை, பொதுமக்கள் முன்னிலையில் 3 பேர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி நடிகையான லவ்லீன் கவுர், முச்சக்கர வண்டியில் சென்றபோது, அவரிடம் இருந்த பணப் பையை ஒரு ஆசாமி திருடிக் கொண்டு தப்பி ஓடினான். உடனே வண்டியில் இருந்து இறங்கிய கவுர், அவனை ஆசாமியைத் துரத்தினார். ஆனால், சிறிது நேரத்தில் அவனுடன் மேலும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்து, கவுரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தும், யாரும் தடுக்க முன்வரவில்லை. இந்த தாக்குதலில் காயம் அடைந்த கவுர் உதவி கேட்டு அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஒருவனைத் தேடி வருகின்றனர்.
Posted by NIsha | Thursday, August 29, 2013 |
Posted in
tamil cinema news
சூர்யாவின் ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் திரைப்படம் தள்ளிப்போவதால் கவலையில் உள்ளாராம் நடிகை சமந்தா. கடந்த வருடம் இரண்டு பிலிம் பேர் விருதினை தட்டிச் சென்ற சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வருகின்றார். தற்போது தெலுங்கில் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளாராம். இரண்டு படத்திற்கான விருதுகளை பெற்றுச் சென்றாலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ மற்றும் ஷங்கரின் ‘ஐ’ ஆகிய இரு படங்களின் வாய்ப்பினை தனது உடல்நலப் பிரச்சனையால் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில், சூர்யாவுடன் ஜோடி சேர்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அதன் படப்பிடிப்பானது இன்னும் தொடராமல் தள்ளிப்போவதால் கவலையில் உள்ளாராம். இதனால் மீண்டும் தெலுங்கிற்கு திரும்பி விடலாம் என்ற யோசனையில் உள்ளாராம்.
Posted by NIsha | |
Posted in
India tamil news
தனது நிர்வாண புகைப்படத்தை MMS மூலம் தனது மாணவனுக்கு அனுப்பி, அவனது பாலியல் இச்சைகளை தூண்டிவிட்டு, அவனுடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட இளம் ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளர். அமெரிக்காவின் North Central Charter Essential பாடசாலையில் கல்வி கற்பித்துவந்த 27 வயதாகும் Rachelle Gendron என்ற ஆசிரியையே, தன்னிடம் கல்விகற்ற 14 வயது மாணவனுடன் உறவு வைத்துக்கொண்ட வழக்கில் கைதாகியுள்ளார். குறித்த மாணவன், தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது… குறித்த ஆசிரியை தனது மொபைல் போனில் இருந்து தனது நிர்வாண புகைப்படத்தை குறித்த மாணவனுக்கு அனுப்பியுள்ளார். பின்னர், அவனது இச்சைகளை தூண்டிவிட்டு, பல்வேறு இடங்களில் வைத்து அம் மாணவனுடன் படுக்கையை பகிர்ந்துள்ளார். இத் தகவல் அடிப்படையில், சிறுவர் துஸ்பிரயோக வழக்கின் கீழ் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 10 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news
கோவா, பலே பாண்டியா உட்படசில படங்களில், நடித்த பியாவுக்கு, “கோ படத்துக்கு பின், கோலிவுட்டில் சரியான படங்கள் இல்லை. அதனால், பக்கத்து மாநிலங்களுக்கு வாய்ப்புத் தேடி படையெடுத்த போது, “தளம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம், தற்போது, தமிழ் பேச தயாராகி வருகிறது. நக்சலைட்டுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள, இப்படத்தில் ஒரு சஸ்பென்சான வேடத்தில் நடித்துள்ளாராம் பியா. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள பியா, “தமிழில், இதுவரை கிளாமரான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் ஆக்ஷன்அவதாரம் எடுத்துள்ளேன். இந்த படத்தில், என் நடிப்பும், ஆக்ஷனும், தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் என்கிறார். பியாவின் ஆசை நிறைவேறுமா என்பது, படம் வெளியானதும் தான், தெரிய வரும்.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News
கட்டார் நாட்டிலுள்ள வர்த்தக நிலைய கட்டடத் தொகுதி ஒன்றிலுள்ள வாகன தரிப்பிடத்தில் கண்டெடுத்த 90 ஆயிரம் கட்டார் ரியால் (33 லட்சம் ரூபா) பணத்தை பொலிஸில் ஒப்படைத்த இலங்கை இளைஞரின் நேர்மையை கட்டார் பொலிஸார் பாராட்டியுள்ளனர். மொஹமட் நிப்ராஸ் என்ற இந்த இலங்கை இளைஞரின் செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இலங்கையில் வீடொன்றை கொள்வனவு செய்யக் கூடிய பெரும் தொகை பணத்தை உரியவிடம் கொடுத்தமை குறித்து அங்குள்ள இலங்கையர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார். அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையைப் பயன்படுத்திய முதலாவது உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் நவநீதம்பிள்ளையே என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரமவின் பம்பலப்பிட்டி வீட்டில் நடந்த சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட சில கோப்புகளைத் தேடுவதற்காக சிலர் மந்தனாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சில இணைய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கொள்ளையர் குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனையோர் இது கொள்ளை முயற்சியல்ல எனத் தெரிவிக்கின்றனர். எனினும் இந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ள நாமால் ராஜபக்ச, அறிவார்ந்த மனிதர்கள் இப்படியான வதந்திகளை நம்பமாட்டார்கள் எனக் கூறினார். கத்தியை விட பேனா கூர்மையானது. துரதிஷ்டவசமாக அதனை சிலர் கற்பனைக் கதைகளை எழுதவும் வதந்திகளை பரப்பவும் பயன்படுத்துகின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news

அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்’ – இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவகாரம். ‘மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம் மறுபுறம் தேட, எங்குதான் இருக்கிறார் அஞ்சலி? விசாரித்தால், தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண்டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகக் கிசுகிசுக்கிறார்கள். இது தொடர்பாக ஏகப்பட்ட வதந்திகள். பதில் சொல்வதற்கு அஞ்சலியும் ஊரில் இல்லை. அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. சினிமா-அரசியல் அறிந்தவர்கள், ஆந்திர நண்பர்கள் எனப் பலரிடமும் விசாரித்ததில் கிடைத்த செய்தி இது… ”அவர் இந்தியா அறிந்த அரசியல் பிரபலம். அவரின் மகன் சினிமா தயாரிப்பிலும் இருக்கிறார். மகனின் சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்க அனுப்பப்பட்டவர்தான் அவரின் மருமகன். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. காதலில் உருகியிருக்கிறார்கள். இந்த விஷயம் அரசல்புரசலாக அரசியல் புள்ளிக்கும் அவரின் மகனுக்கும் தெரியவந்தது. ‘அரசியல்ல இருக்கோம். இதெல்லாம் வெளிய தெரிஞ்சுதுன்னா, நம்ம குடும்பத்துக்கே அசிங்கம்’ என மருமகனைத் தடுத்தார்கள். மாமனாருக்குப் பயந்து அஞ்சலியுடனான காதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார் அந்த மருமகன். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்குப் படப்பிடிப்புக்குப் போன இடத்தில் மாயமானார் அஞ்சலி. ஐந்து நாட்கள் கழித்து ‘பெங்களூருவில் இருந்தேன்’ என்று திரும்பி வந்தார். ஆனால் யாருடன் இருந்தேன் என்பதைப்பற்றி அவர் மூச்சுவிடவில்லை. அரசியல் மருமகனுடன்தான் அவர் தங்கியிருந்திருக்கிறார். இவர்கள் நெருக்கமாக இருந்தாலும்கூட, காதல், கல்யாணம் அளவுக்கு இறஙகுவார்கள் என அரசியல் குடும்பத்தார் எதிர்பார்க்கவில்லை. ஒருகட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து சந்திக்கச் சந்திக்க கடும்கோபம் கொண்டு இருவரையும் எச்சரித்துள்ளார் அரசியல் புள்ளி. ஆனால் மருமகன்-அஞ்சலி ஜோடி மசியவில்லை. மிரட்டலுக்கும் கலங்கவில்லை. மகள், மகன் என அரசியல் புள்ளியின் குடும்பமே கெஞ்சி கதறியிருக்கிறது. ஆனால் இருவரும் காதலில் விடாப்பிடியாக நிற்க, அரசியல் புள்ளிக்கு வேறு வழி தெரியவில்லை. நண்பர் ஒருவரின் உதவியுடன் மகளும் மருமகனும் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். இப்போது இந்தப் புதுப் புயல்” என்கிறார் மருமகன் குடும்பத்தை நன்கு அறிந்த அரசியல் புள்ளி. சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம். ”சித்தி பாரதிதேவியின் கெடுபிடியான கட்டுப்பாட்டில் இருந்தால், இனி எங்கும் நகர முடியாது என்பது அஞ்சலிக்கே நன்றாகத் தெரியும். அதனால் கடத்தல் நாடகமாடி, சித்தியைவிட்டுப் பிரிந்திருக்கிறார். பிறகு ஆந்திராவில் சொந்த வீட்டில் இருந்தவர், மீண்டும் மருமகனுடன் நெருக்கமாகியிருக்கிறார். அவரின் ஆலோசனையின்படியே அஞ்சலி மேற்கொண்டு எந்தப் படங்களிலும் கமிட் ஆகவில்லை. இந்த நிலையில்தான் இருவரும் அமெரிக்கா சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். அஞ்சலிக்கு உடல்நலக் குறைவு உண்டு. அதற்காக சென்னை அண்ணா நகரில் ஒரு பிரபல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவர் காணாமல்போன சமயத்தில் பெங்களூருவில் இருந்து 18 முறை அந்த டாக்டரிடம் இருந்து பேசி, தான் சாப்பிடவேண்டிய மருந்து மாத்திரைகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்த மருந்துகள்கூட மருமகனின் ஆட்கள் உதவியுடன் சென்னையில் இருந்தே வாங்கி அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தகவல் ஆந்திர போலீஸ் விசாரணையின்போது தெரியவந்தது” என்கிறார்கள் பூடகமாக. ‘கோல்மால்’ தெலுங்கு படத்தை தயாரித்த கிஷோர், ”பொதுவா தெலுங்கு தயாரிப்பாளர்கள் தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு பிரச்னை என்றால், அதை தன் பிரச்னையாக பார்ப்பார்கள். அப்படி அஞ்சலி எங்கள் படத்தில் நடித்தபோது அவருக்குப் பிரச்னை வந்தது. அதை தற்காலிகமாக சமாளித்து எங்கள் படத்தில் நடிக்க வைத்தோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதற்கடுத்து அவர் எங்கள் தொடர்பிலேயே இல்லை” என்றார். ‘மதகஜராஜா’ படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து ‘நடராஜு தானே ராஜு’ அதாவது என்.டி.ஆர். என்ற பெயரில் வெளியிடுகிறார் விஷால். அவரும் அஞ்சலியைத் தேடி வருவதாக தகவல் கிடைக்க, அவரிடம் பேசினோம். ”எங்க இருக்காங்கன்னே தெரியலைங்க. அவங்களோட குரல் ஆந்திர ரசிகர்களுக்கு நல்ல பரிட்சயம். அதனால என்.டி.ஆர் படத்துக்கு அவங்க டப்பிங் பேசினாத்தான் சரியா இருக்கும்னு தேடினோம். இதுவரைக்கும் அவங்க சிக்கவே இல்லை” என்றார் வருத்தமான குரலில். அஞ்சலிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள களஞ்சியம், ”சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் ஆஜராகச்சொல்லி அவருக்கு அனுப்பிய மூன்று சம்மன்களுமே திரும்பவந்துவிட்டன. விலாசமற்றவர் என முடிவுசெய்து தமிழ், தெலுங்கு நாளிதழ்களில் நிதிமன்றத்தில் ஆஜராகச்சொல்லி விளம்பரம் தரச்சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்தவாரம் அந்த விளம்பரம் தர உள்ளோம்” என்றார் கோபமான குரலில். எது எப்படியோ, சினிமா புகழ், மீடியா வெளிச்சம், படப்பிடிப்பு பரபரப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனக்கான ஒரு வாழ்க்கையை அஞ்சலி அமைத்துக்கொண்டார் என்றே தோன்கிறது.
Posted by NIsha | |
Posted in
tamil cinema news

எதிர்நீச்சல் படத்தை தனது வொண்டர்பார் பிலிம்சுக்காக தயாரித்த தனுஷ், இப்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தையும் தானே தயாரித்து வருகிறார். அதோடு, இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதுமுகங்கள் நடிக்கும் காக்கா முட்டை என்றொரு படத்தையும் தயாரிக்கிறார். சேரி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம். அதனால் அதில் ஒரு முன்னணி நடிகர் யாராவது நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தனுசும், வெற்றிமாறனும் பேசிக்கொண்டார்களாம். இந்த விசயம் எப்படியோ சிம்புவின் காதுக்கு செல்ல, தானே தனுசை தொடர்பு கொண்டு அந்த படம் பற்றியும், அதில் உள்ள கதாபாத்திரம் பற்றியும் கேட்டறிந்தாராம். அப்போது, அந்த கேரக்டர் சிம்புவை வெகுவாக பாதித்து விட, நானே நடிக்கிறேன் என்று சொன்னாராம். அவரிடமிருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத தனுஷ், இன்ப அதிர்ச்சியடைந்தாராம். உடனே சிம்புவே முன்வந்து இந்த விசயத்தை வெற்றிமாறனிடமும் சொல்லி, சிம்பு நடிப்பதை உறுதிபடுத்தி விட்டாராம். ஆக, இத்தனை நாளும் சிம்பு-தனுசுக்கிடையே தொழில் போட்டி இருந்து வருவதாக வெளியான செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு, அவர்களின் நட்பினை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.
Posted by NIsha | |
Posted in
Srilanka Tamil News

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஈ.ழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயணிகள் போக்குவரத்து விடயத்தில் குறிப்பாக வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை உடன் தவிர்க்கும் நோக்கில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். ஓமந்தை சோதனைச்சாவடியில் குறிப்பாக வடபகுதி தமிழ் பேசும் மக்கள் தமது போக்குவரத்தின் போது அசௌகரியங்களை சந்தித்து வருவதாக எடுத்து விளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஓமந்தை சோதனை சாவடியை முற்றாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்து விளக்கிய நியாயங்களை ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு, ஓமந்தை சோதனை நடவடிக்கையை முதற்கட்டமாக உடன் தளர்த்துவதற்கு தான் உத்தரவிடுவதாகவும், அடுத்த கட்டமாக விரைவில் குறித்த சோதனை சாவடியை முற்றாக அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுப்பேன் என்றும் ஐனாதிபதி அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார். ஓமந்தை சோதனை நடவடிக்கையை உடன் தளர்த்துவதற்கும், விரைவில் முற்றாக சோதனை சாவடியை அகற்றுவதற்கும் இணக்கம் தெரிவித்து தனது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஐனாதிபதி அவர்களுக்கும், சக அமைச்சர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்களின் சார்பில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.