Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
தயாரிப்பாளர் - விநியோகஸ்தர்கள் மோதல்: "மதகஜராஜா' படம் வெளியாவதில் சிக்கல்?
தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் "மதகஜராஜா' படம் வெள்ளிக்கிழமை (செப்.6) வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் தயாரிப்பில் விஷால் நடித்துள்ள படம் "மதகஜராஜா'. வரலெட்சுமி, அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து படம் தயாராக இருந்தும் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நடிகர் விஷால் இப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கினார். தனது விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் வெளியிடுவதாகவும் அறிவித்தார்.
இதற்காக சினிமா ஃபைனான்சியர் மதுரை அன்புவிடம் பல கோடி கடன் பெற்று படத்தை வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டார். இதையடுத்து வெள்ளிக்கிழமை (செப்.6) படம் வெளியாக இருந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் தரப்புக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னையால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே இரண்டு நாள்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.