Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
தந்தங்களுக்காக நீர்நிலைகளில் சயனைட் கலந்து யானைகள் கொலை
சிம்பாப்வே ஹவாங்கி என்ற பகுதியில், 15 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவில், உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள காட்டில் 4 மாதங்களில், 70 யானைகள் வேட்டையாடப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, இங்குள்ள நீர்நிலைகளில் வேட்டைக்காரர்கள், ‘சயனைடு’ விஷம் கலந்துள்ளனர். இதனால் 40 யானைகள் தற்போது கொல்லப்பட்டு உள்ளன.
வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் யானைகள் இறந்துக் கிடக்கின்றன. இவற்றில், பல யானைகளின் தந்தங்கள் திருடப்பட்டு உள்ளன.
தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் கொடுஞ்செயல் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 10சதவிகிதம் அதிகரித்திருப்பதாக சிம்பாவேயின் நேஷனல் பார்க் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அரசு சிறப்பு கவனம் செலுத்தி தந்தங்களுக்காக யானைகளை கொல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.