Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
பயங்கரவாதத்தை முறியடிக்க முடியுமென உலகுக்கு சொன்ன நாடு இலங்கையே! இந்திய ஜனதா கட்சியின் தலைவர் தெரிவிப்பு!
ஜனநாயக நாடொன்று வெளிநாடுகளின் உதவிகளின்றி பயங்கரவாதத்தை எவ்வாறு முறியடிக்க முடியும் என்ற வழியை எமக்கு காண்பித்த நாடு இலங்கையாகும். இதற்காக பிராந்திய நாடுகள் இலங்கைக்கு விஷேடமாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக இந்திய ஜனதா கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் பாதுகாப்பு கருத்தரங்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயாரத்னாயக்கவின் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
முரண்பாட்டுக்குப் பின்னரான இலங்கை சவால்களும் பிராந்திய உறுதிப்பாடுகளும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று விஷேட உரை நிகழ்த்திய டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில்:-
இஸ்ரேல் இராணுவத்தின் வினைத்திறனை மிஞ்சும் அளவுக்கு இலங்கை இராணுவம் திறமையானதாக மாறியுள்ளது. தமிழ் நாட்டிலிருந்து இலங்கை தொடர்பில் வெளியாகும் செய்திகளை பார்க்கும் போது முழு இந்தியாவும் எதிர்க்கின்றது என்ற உணர்வு இலங்கையர்களுக்கு ஏற்படலாம். ஆனால், உண்மையான நிலைமை அவ்வாறு இல்லை என்றும் டொக்டர் சுப்பிரமணியம் சுவாமி சுட்டிக் காட்டினார்
2009ம் ஆண்டு மேமாத நடுப்பகுதியில் இலங்கை ஆயுதப்படையினர் மிலேச்சத்தனமான கொலைகார பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈக்கு எதிரான இறுதி யுத்தத்தில் அந்தப் பயங்கரவாத இயக்கத்தை துவம்சம் செய்யும் சாதனையை புரிந்தது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை மற்றும் அவரது பிரதான தளபதிகளும் 2009 மே மாதம் 19ம் திகதியன்று மரணமடைந்ததுடன் இலங்கையின் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற இரத்தஆற்றுக்கு வழியமைத்த பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எனவே, மேமாதம் 19ம் திகதியன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட வெற்றிதினமாக அனைவரும் நினைவுகூர வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வெற்றியை அடைவதற்கு இலங்கை ஆயுதப்படையினர் மாபெரும் தியாகங்களை புரிந்ததாகவும் இத்தகைய மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிராக சிவில் சமூக அமைப்பு உலக ரீதியில் மேற்கொண்ட போராட்டமும் இந்த வெற்றிக்கு உறுதுணை புரிந்தது என்று கூறினார்.
இந்த நாட்டுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே இந்தப் பாராட்டு சாரும். அதி உன்னத நோக்கத்திற்காக உயிர்த்தியாகம் செய்தாவது இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமென்று ஜனாதிபதி ஆயுதப்படையினருக்கு அளித்த ஊக்குவிப்பும், உறுதுணையுமே பிரதான காரணமென்று அவர் குறிப்பிட்டார்.