Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

மலையாள நடிகருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த நஸ்ரியா

நேரம் பட நாயகி, தற்போது ஜெய், தனுஷ், ஆர்யா, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார். அதோடு ஒரேயொரு படத்திலேயே தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் மனதில் இடம்பிடித்துவிட்டார் நஸ்ரியா. அதனால், அடுத்தடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ண படாதிபதிகள் க்யூவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழைப்போலவே தனது தாய்மொழியான மலையாள படங்களிலும் நடித்து வரும் நஸ்ரியா, நான் நடிக்க வேண்டுமானால், நான் கால்சீட் கொடுக்கிற தேதியில் நீங்கள் படப்பிடிப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றொரு புதிய கண்டிசனையும் தற்போது பிறப்பித்திருக்கிறார். ஆனால், அதற்கும் உட்பட்டு படாதிபதிகள் அவரை மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தன்னிடம் ஒரு படத்தில் நடிக்க கதை சொல்ல வந்த இயக்குனரிடம், இந்த கதையில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னாராம் நஸ்ரியா. அதையடுத்து அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குனர், படாதிபதி இருவருமே ஓ.கே சொல்லிவிட்டதால், இப்போது நஸ்ரியாவின் சிபாரிசினால் தமிழுக்கு என்ட்ரி கொடுக்க உள்ளார் துல்கர்சல்மான். இவர் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சலால் மொபைல்ஸ் என்ற படத்தில் துல்கர்சல்மானுடன், நஸ்ரியா ஜோடி சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட அழுத்தமான நட்புதான் இந்த சிபாரிசுக்கு பின்னணியாம்.

About the Author

Posted by NIsha on 6:46 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:46 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "மலையாள நடிகருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த நஸ்ரியா"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive