Headlines
Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha

தேனீர் (Tea) அருந்துவது நமக்கு நன்மையா? தீமையா?samayal Kuripu




காஃபி மற்றும் தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்க வில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவ துமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கி றோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர். ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மை கள் அடங் கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வு கள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ் வொன்றாக நமக்கு தெரிவி க்கின்றன. பழங்கால த்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனை களுக்கு சிறந்த நிவாரணி யாக விளங்கு கிறது தேநீர். அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப் பட்டுள்ளன அதைப்படித்து தெரிந்து கொள்ளுங்கள்

எடை குறைவு

க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல் எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது. இது உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து கொழுப்பினை குறைப்பதால் (முக்கியமா க வயிற்று பகுதியில்), உடல் எடை குறை யும்.

பல் சொத்தையாவதை தடுக்கும்.

தேநீரில் இயற்கையான ஃபுளோரைடு என்ற ரசாயனம் சிறிதளவில் இருப்பதால், பல் சொத்தையாவதை அது தடுக்கும். எப்படி யெனில் ஃபுளோரைடு எச்சிலோடு கலக்கும் போது, சொத்தைகளை உண்டாக்கும் துணை உற்பத்திப் பொருட்களை பாக்டீரியாவால் உற்பத்தி செய்ய முடியாது. மேலும் ஃபுளோ ரைடு, பல் சொத்தையாகும் ஆரம்ப நிலையி ல் அதை சரி செய்ய உதவும்.

புற்றுநோயை தடுக்கும்

தேநீரில் உள்ள மற்றொரு ஆக்சிஜெனேற்றத் தடுப்பானான பாலிஃபீனா ல், புற்றுநோய்க்கு எதிராகசெயல்படும். எனவே இதற்கு நன்றியை முதலில் நாம் தெரிவிக்க வேண்டும். இதற் காக செய்யப்படும் ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளும் இத னை இன்னும் உறுதியாக சொல்லாவிட்டாலும், தேநீரி ல் உள்ள பாலிஃபீனால் மற்றும் கேட்சின்ஸில் உள்ள உயிரிய செயல்பாடு புற்றுநோயை தடுக்கும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

உடம்பில் நீர்ச்சத்தை அதிகரிக்கும்

தினசரி எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற விதி முழுவதும் சரி யில்லை என்று விஞ்ஞானிகள் ஒத்து க் கொண்டுள்ளனர். பதிலாக தண்ணீ ருடன் சேர்த்து, தேநீர் மற்றும் காபிபோ ன்ற பானங்களும் உடம்பில் நீர்ச்சத் தை அதிகரிக்க உதவும் என்று சொல்கி ன்றனர். எனவே சிறிதளவு காப்ஃபைன் சேர்ப்பது தவறில்லை; ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் பருகலாம்.

தமனித் தடிப்பை குறைக்கும்

தமனித் தடிப்பு என்பது தமனி இறுகி குறுகுவது. ஒரு ஆய்வின்படி, தினசரி 1-2 கப் தேநீர் பருகும் பெண்களுக்கு 50 சதவீதம் வரை தீவிர தமனித் தடிப்பு குறைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாதத்திற்கும் நிவாரணி

பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர் பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.

நரம்பியல் நோய்களைத் தடுக்கும்

பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக அல்சைமர் போன்ற சிதைகின்ற நோய்கள். மேலும் க்ரீன் டீ-யில் உள்ள பாலிஃபீ னால், மூளை செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் டோபமைன் மற்றும் எஃபிநெஃப்ரின் போன்ற நரம்பியத்தூண்டுவிப்பிகள் சேதமடை யாமல் பார்த்துக் கொள்ளும். மொத்தத்தில் ஒன் று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால், படிக் கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.

புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும்

இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன் டீ பருகிய ஆண்க ளுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத் து நிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதி லும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.

எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்

க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும் அதிக ரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட் டுள்ளது. அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்பு அதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயது பெண் மணிகளுக்கு இருப்பதில்லை.

About the Author

Posted by NIsha on 3:10 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 3:10 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "தேனீர் (Tea) அருந்துவது நமக்கு நன்மையா? தீமையா?samayal Kuripu"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive