Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
அசுத்தமான தண்ணீர் போத்தல்கள் புறக்கோட்டையில் மீட்பு
மனித பாவனைக்கு உதவாத அசுத்தமான தண்ணீர் போத்தல்கள் புறக்கோட்டை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.
அந்த தண்ணீர் போத்தல்களில் எண்ணெய் மற்றும் கிறீஸ் போன்றவை கலந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டையிலுள்ள கடைகளில் சுமார் 200 கடைகளில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறான அசுத்தமான தண்ணீர் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.