Headlines
Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' அட்டவணை திடீர் மாற்றம். தெலுங்கானா பிரச்னை காரணமா/




இந்தியாவில், சர்வதேச உள்ளூர் சாம்பியன் அணிகள் பங்கேற்கும், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், செப்.17 முதல் அக்.6 வரை நடக்கிறது. 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்று: இந்தியா (3), ஆஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), வெஸ்ட் இண்டீசை (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் செப்.17-20ம் தேதிகளில், ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நடக்க இருந்தன. விநாயகர் சதூர்த்தி ஊர்வலம், தெலுங்கானா பிரச்னை போன்ற காரணங்களுக்காக போதிய பாதுகாப்பு வழங்குவதில் ஐதராபாத் போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டன. இதனையடுத்து 6 தகுதிச் சுற்றுப் போட்டிகள், மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க (பி.சி.ஏ.,) மைதானத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.

பிரதான சுற்று: இதேபோல, ஐதராபாத்தில் நடக்க இருந்து ஆறு பிரதான சுற்றுப் போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதன்படி, தலா இரண்டு போட்டிகளாக மொகாலி (செப்., 24), ராஞ்சி (செப்., 28), ஆமதாபாத்தில் (செப்., 30) உள்ள மைதானங்களில் நடத்தப்படுகிறது.

About the Author

Posted by NIsha on 7:11 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 7:11 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for " ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' அட்டவணை திடீர் மாற்றம். தெலுங்கானா பிரச்னை காரணமா/"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive