Headlines
Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha

என் மண்டபத்தை இடிச்சவங்களோட எப்படி கூட்டு சேர முடியும்? செயற்குழுவில் விஜயகாந்த் ஆவேசம்

தே.மு.தி.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 'நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை’ என்று அறிவிக்கப்பட்டதால், பரபரப்பு கூடியது. 'தேர்தல் வேலைகளைத் தொடங்க வேண்டுமானால், பணம் வசூல் செய்ய வேண்டும். அதற்காகத்தான் இந்த மீட்டிங்’ என்று விஜயகாந்த்தை அறிந்தவர்களுக்குக்கூடத் தெரியாது. கூட்டணி பற்றி பேச்சு வந்ததும் எம்.எல்.ஏ. ஒருவர், 'நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே கரைசேர முடியும்’ என்று சொல்ல... 'அவங்கதான் என் மண்டபத்தை இடிச்சவங்க. அவங்களோட எப்படி கூட்டு சேர முடியும்? அதெல்லாம் சரியா வராது. யாரோடு கூட்டணி வைக்கலாம் என்பதைப் பத்தியெல்லாம் இப்போ பேச வேண்டிய அவசியம் இல்லை’ என்று பதில் கொடுத்து அந்த எம்.எல்.ஏ-வை உட்கார வைத்தாராம் விஜயகாந்த். ராகுல் சொன்ன வாழ்த்துக்கு இங்கே அவர் ரியாக்ஷன் காட்டியதாகவும் சொல்கிறார்கள்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, 'கூட்டணி பற்றி கடைசி நேரத்தில் முடிவெடுக்கலாம். எந்த நேரத்தில் என்ன மாறும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால தயவு செஞ்சி இப்போ யாரும் கூட்டணி பற்றி பேசாதீங்க. அதுக்கும் காலம் வரும். அப்போ பேசலாம்!’ என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்.''

''கடைசியாக பேசிய விஜயகாந்த், 'உங்க எல்லோரையும் இப்போ நான் வரச் சொன்னதுக்கு காரணமே நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம தயாராகணும். அதுக்குக் கட்சிக்குப் பணம் தேவை. பணம் இல்லைன்னா நாம எலெக்ஷனை சந்திக்க முடியாது. இந்தக் கூட்டம் முடிஞ்சதும் நம்ம கட்சியில் இருக்கும் 59 மாவட்டச் செயலாளர்களுக்கும் டொனேஷன் வசூல் பண்ற புத்தகம் கொடுக்கச் சொல்லி இருக்கேன். ஒவ்வொருத்தரும் கட்டாயம் 50 லட்சம் வசூல் பண்ணணும். அப்படி செஞ்சா மட்டும்தான் நாம தேர்தலை தைரியமா சந்திக்க முடியும்’ என்று சொன்னதும் நிர்வாகிகள் முகம் லேசாக இருண்டுள்ளது.''



''இன்னும் ஒரு குண்டு போட்டுள்ளார் விஜயகாந்த். 'என்னோட பிறந்த நாளுக்கு புதுச்சேரியுடன் சேர்த்து நம் கட்சியின் 61 மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டி கொடுக்குறதா சொல்லியிருந்தேன். சென்னையில நான் கொடுத்துட்டேன். மத்த ஊர்களுக்கு ஸ்கூட்டி ரெடியா இருக்கு. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் 55 ஆயிரம் ரூபா கொடுத்து அந்த ஸ்கூட்டியை வாங்கிட்டுப் போயிடுங்க. அதை நீங்க யாருக்கு வேணும்னாலும் கொடுங்க...’ என்று சொல்ல, கூட்டத்துக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள் பேய் அறைந்ததைப்போல உட்கார்ந்திருந்தனர்.''



''கூட்டம் முடிந்ததும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. உடனே விஜயகாந்த் கிளம்பிவிட்டார். சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன், சந்திரகுமார் ஆகியோர் மாவட்டச் செயலாளர்களிடம் டொனேஷன் புத்தகத்தை நீட்ட, 'யாருகிட்ட போய் பணம் கேட்கச் சொல்றீங்க... கொடுத்த பணத்துக்கே கணக்கு காட்டுறது இல்லைன்னு ஊரெல்லாம் பேசுறாங்க..?’ என்று சில மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே புலம்பிவிட்டுச் சென்றனர். 'உங்களால வசூல் பண்ண முடியலைன்னா சொல்லிடுங்க.. யாரு வசூல் பண்றாங்களோ அவங்களுக்கு உங்க பதவியைக் கொடுத்துக்குறோம்!’ என்று பதில் சொல்லி அனுப்பினார்களாம் மூவர் அணியினர்.''



  

About the Author

Posted by NIsha on 7:45 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 7:45 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "என் மண்டபத்தை இடிச்சவங்களோட எப்படி கூட்டு சேர முடியும்? செயற்குழுவில் விஜயகாந்த் ஆவேசம்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive