Headlines
Published On:Monday, September 2, 2013
Posted by NIsha

உதயநிதியுடன் காரைக்குடி செல்கிறாராம் நயன்தாரா.

இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பிற்காக உதயநிதியுடன் காரைக்குடி செல்லப்போகிறாராம் நடிகை நயன்தாரா. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை தொடர்ந்து உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தினை சுந்தரபாண்டியன் புகழ் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்குகிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக காரைக்குடி செல்கிறார்களாம் படக்குழுவினர். இப்படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். படிப்பறிவில்லா நாயகனாக உதயநிதி நடிக்கிறார். மேலும் இந்த கூட்டணியில் சந்தானமும் சேர்ந்து கொமடியில் கலக்க வருகிறார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

About the Author

Posted by NIsha on 11:13 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 11:13 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "உதயநிதியுடன் காரைக்குடி செல்கிறாராம் நயன்தாரா."

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive