Headlines
Published On:Sunday, September 1, 2013
Posted by NIsha

மேர்வின் சில்வாவிடம் லஞ்ச ஊழல் விசாரணை

பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். அமைச்சரின் சொத்துக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்த லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் புதல்வர் மாலக சில்வாவின் சொகுசு வாகனம் தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யார் இந்த முறைப்பாட்டைச் செய்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. அமைச்சரின் சொத்துக்களின் அடிப்படையில், மிகவும் விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்யக் கூடிய வசதி கிடையாது என முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சில ஆளும் கட்சி அமைச்சர்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About the Author

Posted by NIsha on 6:04 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:04 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "மேர்வின் சில்வாவிடம் லஞ்ச ஊழல் விசாரணை"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive