Headlines
Published On:Sunday, September 1, 2013
Posted by NIsha

நவநீதம்பிள்ளை கருத்துக்களில் சந்தேகம் உள்ளது!- கெஹெலிய ரம்புக்வெல்ல

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களில் சந்தேகம் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவநீதம்பிள்ளை அம்மையார் தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இலங்கை ஏதேச்சாதிகார நாடாக மாறிவருவதாக கூறியதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அரசாங்கம் என்ற வகையிலும் பிரஜைகள் என்ற முறையிலும் நியாயமான சந்தேகம் ஏற்படுகிறது. அவர் நாட்டின் ஜனநாயக அம்சங்களை மறைத்து வெளியிட்ட கருத்தாகவே அதனை கருத முடியும் என்றார்.

About the Author

Posted by NIsha on 6:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:00 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "நவநீதம்பிள்ளை கருத்துக்களில் சந்தேகம் உள்ளது!- கெஹெலிய ரம்புக்வெல்ல"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive